சாயிஷா பாட.. சூர்யா ஆர்யா லைக் போட.. விஜி மெய் மறக்க.. டிராஜேந்தர் கண்ணீர் விட்டுக் கதற.. அப்பப்பா.!
நடிகை சாயிஷா காக்க காக்க படத்தின் ஒன்றா இரண்டா பாடலை பாடி வெளியிட்ட வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.
சென்னை: காக்க காக்க படத்தின் ஒன்றா இரண்டா பாடலை பாடி, நடிகை சாயிஷா வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட சாயிஷா, தற்போது அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ஆர்யாவும், சாயிஷாவும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.
சாயிஷா நல்ல டான்ஸர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அவரும் ஒரு சிறந்த பாடகரும் கூட என்பதை வெளிப்படுத்தியுள்ளது ஒரு வீடியோ.
ஷுட்டிங் இடைவெளியில் ஒரு பாட்டு
காக்க காக்க படத்தின் 'ஒன்றா இரண்டா' பாடலை பாடி சாயிஷா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அந்த பாடலின் பல்லவி முழுவதையும் அவர் பாடியிருக்கிறார். பாட்டின் மீது உள்ள காதலால், படப்பிடிப்பு இடைவேளையின் போது இந்த பாடலை பாடியிருப்பதாகவும், தவறாக இருந்தால் மன்னிக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

லைக்ஸ் மழை
ஆனால் சாயிஷாவின் குரல் வளத்தை கேட்டு பலரும் மெய் சிலிர்த்து போய்யுள்ளனர். அவரின் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் மழை பொழிந்து வருகிறது. ஆர்யா, சூர்யா உள்பட பலரும் லைக்கியுள்ளனர். 'வாவ், சூப்பர், உங்களுக்கு இவ்வளவு அருமையான குரலா' என ரசிகர்கள் பாராட்டியும் வருகின்றனர்.
இன்னொரு முறை பாடுங்க
நடிகை விஜி சந்திரசேகர், " சோ க்யூட். நீங்க ஒரு அருமையான பாடகி" என மெய் மறந்து பாராட்டியுள்ளார். சூர்யா ரசிகர்கள் சிலர், முழு பாடலையும் பாடி வீடியோ பதிவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கதறி அழுத டி.ராஜேந்தர்
ரசிகர் ஒருவர் டி.ராஜேந்தர் கதறி அழுவது போன்ற ஜிப் பைல் ஒன்றை கமெண்டாக பதிவிட்டுள்ளார். 'உங்களுடைய அடுத்த படத்தில் நீங்க ஒரு பாட்டு பாடனும்' என மற்றொரு ரசிகர் கேட்டுக்கொண்டுள்ளார். இப்படி சாயிஷாவின் வீடியோவை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications