twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பள்ளி மாணவி வேடத்தில் அசத்திய கதாநாயகிகள்.

    By Mayura Akilan
    |

    பள்ளிப் பருவம் அழகானது... எத்தனை ஆண்டுகள் கழித்து நினைத்துப் பார்த்தாலும் பசுமை மாறாமல் மனதில் சந்தோசப் பூக்களை பூக்க வைக்கும். அதிலும் பெண்கள் பதின் பருவத்தை எட்டிய உடன் பாவடை தாவணி போட்டு ரெட்டை ஜடையோடு பள்ளிக்குச் செல்வதே ஒரு அழகுதான்.

    பட்டாம் பூச்சிகளாய் பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகளை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் நின்று கொண்டிருக்கும். சினிமா இயக்குநர்கள் தங்களின் பள்ளிப் பருவத்தை படங்களில் பதிவு செய்வார்கள்.

    அதில் பாவடை தாவணி பருவத்தில் பார்த்து நேசித்த பெண்ணின் சாயலில் உள்ள கதாநாயகிகளை தேடி தேடி சென்று படங்களுக்கு ஒப்பந்தம் போட்டு அந்த படத்தினை வெற்றி பெறவும் வைப்பார்கள். அதுபோன்று பள்ளி மாணவி வேடத்தில் அசத்திய கதாநாயகிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமே...

    ரேவதி – கன்னி ராசி

    ரேவதி – கன்னி ராசி

    குட்டிப் பெண்ணாய் நடிகை ரேவதி பாவடை தாவணி அணிந்து பள்ளிக்குப் போனதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    திரிஷா – ஜி, அபியும் நானும்

    திரிஷா – ஜி, அபியும் நானும்

    ஜி படத்தில் திரிஷா கும்பகோணத்தில் பள்ளிக்குச் செல்லும் குட்டிப் பெண்ணாய் பாவாடை தாவணி அணிந்திருப்பார். அதேபோல் 20 வயதிற்கு மேல் நடித்த அபியும் நானும் படத்தில் மினி ஸ்கர்ட் அணிந்த பள்ளி மாணவியாய் அசத்தியிருப்பார்.

    நயன்தாரா – ஐயா

    நயன்தாரா – ஐயா

    ஐயா படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. ஆரம்பமே பள்ளி மாணவி தோற்றம் தான். மெரூன் கலர் தாவணி ஸ்கூல் யூனிபார்ம் அசத்தல்தான் நயன்தாராவிற்கு.

    பிரியா மணி – பருத்தி வீரன்

    பிரியா மணி – பருத்தி வீரன்

    பச்சை பாவடை தாவணியில் பருத்தி வீரன் நாயகி பிரியாமணியின் தோற்றம் சூப்பர்ல. அந்த குரலில் கம்பீரம் கூடுதலாக இருக்கும்

    ரீமா சென் – வல்லவன்

    ரீமா சென் – வல்லவன்

    வல்லவனில் ரீமா சென் பள்ளி மாணவி தோற்றத்தில் சில காட்சிகள் நடித்திருப்பார். ஆனால் அவரது முதிர்ச்சியான தோற்றத்திற்கு அந்த கெட் அப் பொருத்தமாக இருக்காது.

    பூனம் பாஜ்வா – சேவல்

    பூனம் பாஜ்வா – சேவல்

    இயக்குநர் ஹரி இயக்கிய சேவல் படத்தில் கதாநாயகி பூனம் பாஜ்வா கிராமத்து கதாநாயகியைப் போல பாவடை தாவணியில் அசத்தியிருப்பார்.

    களவாணி – ஓவியா

    களவாணி – ஓவியா

    2000 வரை வெளியான படங்களில் பாவடை தாவணி என்றால் அப்புறம் பள்ளி மாணவிகளுக்கு சுடிதார்தான் யூனிபார்ம். களவாணி படத்தில் ஓவியா ரெட்டை ஜடை போட்டு சுடிதார் அணிந்த பட்டாம் பூச்சியாய் வலம் வருவார்.

    மல்லிகா – ஆட்டோகிராப்

    மல்லிகா – ஆட்டோகிராப்

    ஆட்டோ கிராப் படத்தில் பள்ளி பருவத்து நினைவுகளை பதிவு செய்திருப்பார் சேரன். அதில் கதாநாயகி மல்லிகா முதலில் பாவடை சட்டையும், பருவத்தை எட்டிய உடன் பாவடை தாவணியுமா கிராமத்து மாணவியாக வலம் வந்திருப்பார்.

    சுருதிஹாசன் – 3

    சுருதிஹாசன் – 3

    கிளாமர் குயின் ரேஞ்சுக்கு நடித்து வரும் சுருதி ஹாசன் 3 படத்தில் ரெட்டை ஜடை அணிந்து சுடிதார் போட்ட பட்டாம் பூச்சியாய் நடித்திருப்பார். பள்ளி மாணவி கெட் அப் சுருதிக்கு அசத்தலாய் செட் ஆகியிருக்கும்.

    ஹன்சிகா – சிங்கம் 2

    ஹன்சிகா – சிங்கம் 2

    சிங்கம் 2 படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. இதுவும் ஹரியின் படம்தான். இதில் கதாநாயகி ஹன்சிகாவிற்கு பள்ளி மாணவி கெட் அப் போட்டிருக்கிறாம். எப்படி இருக்கிறது என்பது படம் வெளியான பின்னர்தான் தெரியும்.

    English summary
    It’s not only our lead men who are adept at playing school but our girls are competent in that area too. As Shruti Hassan’s 3 act would have made you realize, it’s not a tough task to prance around coyly in those pastel blue frocks and tight white shirts. Here are a few of them who did it with élan, age notwithstanding often.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X