Scoop: சின்னத்திரைக்கு வரும் நயன்தாரா.. என்ன சேனல், என்ன நிகழ்ச்சினு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
கலர்ஸ் டிவி நடன நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்க இருக்கிறார் நயன்தாரா.
சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகை நயன் தாராவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க இருக்கிறார்.
கமல், விஷால், விஜய் சேதுபதி, வரலட்சுமி என சமீபகாலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்களின் பார்வை சின்னத்திரை பக்கம் திரும்பியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கூறியது போல, 'சினிமாவைவிட வலிமையான ஊடகமாக சின்னத்திரை' இருப்பது தான் அதற்குக் காரணம்.
அதனாலேயே தமிழின் முன்னணி இடத்தில் உள்ள நடிகர், நடிகைகளும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக, நடுவராக கலந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது இந்த பட்டியலில் நடிகை நயன்தாராவும் சேர்ந்துள்ளார்.

சர்ப்ரைஸ்:
இது தொடர்பான புரோமோவும் கலர்ஸ் சேனலில் தற்போது ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டது. ஆனால், அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பதை சர்ப்ரைசாக வைத்துள்ளனர் சேனல் நிர்வாகத்தார்.

நடன நிகழ்ச்சி நடுவர்:
நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், நயன் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக பங்கேற்பது தெரிய வந்துள்ளது. அந்த நிகழ்ச்சியின் கான்செப்டே இரண்டு நடுவர்கள் நிரந்தரமாக இருக்க, வாராவாரம் புதிய பிரபலம் ஒருவர் நடுவராக கலந்து கொள்வார்.

ஆச்சர்யம் ஆனால் உண்மை:
அந்த அடிப்படையில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ஒரு எபிசோட்டிற்கு நயன் நடுவராக பங்கேற்கிறார் எனத் தெரிகிறது. தனது பட புரோமோசன்களில் கூட அவ்வளவாக ஆர்வம் காட்டாத நயன், சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகி இருப்பது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பு:
இதனால், எப்போது அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். விரைவில் நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











