»   »  மீரா-தாஸ் ரீ யூனியன்-பின்னனி!

மீரா-தாஸ் ரீ யூனியன்-பின்னனி!

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் தனது செல்வாக்கு மங்கி வருவதாலும், பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதாலும், மலையாளத்தில் மறுபடியும் தீவிர கவனம் செலுத்தலாமே என்று எண்ணியதாலும்தான் பிரிந்திருந்த லோகிததாஸுடன் மீண்டும் மீரா ஜாஸ்மின் கரம் கோர்த்திருப்பதாக கூறப்படுகிறது.

சர்ச்சைகளின் நாயகியாகவே இருந்து வருகிறார் மீரா ஜாஸ்மின். அவர் குறித்த வதந்திகளுக்கும், செய்திகளுக்கும் பஞ்சமே இல்லை. அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் மீராவைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டேதான் உள்ளது.

இந்த வதந்திகள் குறித்து மீரா கவலைப்படாவிட்டாலும் கூட அவர் மார்க்கெட் நிலவரம் பெரும் கலவரமாக உள்ளதாம். இதனால் மீரா பயந்து போயுள்ளாராம்.

மலையாளத்தில் இருந்து தமிழ், தெலுங்கில் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா. ஒரு கட்டத்தில் தமிழில் படு வேகமாக முன்னேற ஆரம்பித்தார் மீரா. ஆனால் இப்போது அவரை வைத்துப் படம் எடுக்க எந்தத் தயாரிப்பாளருக்கும் ஆர்வம் இல்லையாம்.

இதனால் பெரிய ஹீரோக்கள் என்றில்லாமல் இளம் நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடிக்க ரெடியாகி விட்டாராம் மீரா. தமிழில் தற்போது பரத்துடன் நேபாளி படத்திலும், தெலுங்கில் அங்குள்ள ஸ்ரீகாந்த்துடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா.

இதுதவிர சமீபத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவை அணுகியுள்ளார். நீங்கள் தெலுங்கில், பவன் கல்யாணை வைத்து இயக்கப் போகும் புலி படத்தில் 2வது நாயகி வாய்ப்பாவது கொடுங்கள் என்று கேட்டாராம். ஆனால் முதலில் எந்த முடிவையும் தெரிவிக்காமல் அனுப்பி விட்டாராம் சூர்யா.

இருந்தாலும் விடாத மீரா, தொடர்ந்து சூர்யாவை தாஜா செய்ததில் சரி படத்தில் உங்களுக்கு ஒரு ரோல் உள்ளது என்று கூறி அனுப்பியுள்ளாராம். ஆனால் என்ன ரோல் என்பதை அவர் சொல்லவில்லையாம்.

மீரா குறித்து தமிழ் சினிமாவில் நல்லபடியாக பேசவே ஆள் இல்லாத நிலை காணப்படுகிறது. அவர் ஒரு கோள் சொல்லி என்றுதான் மீராவைப் பற்றி பலரும் புலம்புகிறார்கள்.

இங்கு ஒன்று பேசுவார், அங்கு ஒன்று பேசுவார், கடைசியில் இரு தரப்புக்கும் இடையே சண்டையை மூட்டி விட்டு எஸ்கேப் ஆகி விடுவார் என்கிறார்கள்.

இதற்கு அவர்கள் காட்டும் சமீபத்திய உதாரணம், என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவுக்கும், ரவி தேஜாவுக்கும் இடையே மூட்டி விட்ட சண்டையைத்தான். பாலகிருஷ்ணா பற்றி ரவி தேஜா குண்டக்க மண்டக்க கூறினார் என்று செய்தியை பரப்பி விட்டார். இதனால் கடுப்பான பாலகிருஷ்ணா, சென்னைக்கு ரவி தேஜாவை வரவழைத்து குமுறு குமுறென்று குமுறி மறுபடியும் ஆந்திராவுக்கே அனுப்பி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

இப்படி மீரா செய்து வந்து குழப்பத்தால் இன்று அவரை வைத்துப் படம் எடுக்க பாம்பு கூட தயாராக இல்லையாம். இதனால் மறுபடியும் மலையாளத்துக்க போய் விடத் தீர்மானித்துள்ளாராம் மீரா. இதனால்தான் விட்டுப் போன லோகிததாஸ் நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ளாராம்.

இனி தமிழ், தெலுங்கை விட மலையாளத்தில் அதிக கவனம் செலுத்த அங்கு வலுவான ஆங்கரைப் போட ஆயத்தமாகி வருகிறார் மீரா என்று கூறுகிறார்கள். இதுதான் லோகிததாஸ், மீரா ஜாஸ்மின் ரீ யூனியனின் பின்னணியாம்!

அப்ப, கல்யாணம்??

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil