ஹன்சிகாவுக்கு போட்டின்னா அது தனுஷ் நாயகி தானாமே?
சென்னை: தனிக்காட்டு ராணியாக வலம் வரும் ஹன்சிகாவுக்கு நேரம் பட நாயகி நஸ்ரியா நஸீம் போட்டியாக இருப்பார் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
அது என்னவோ தெரியவில்லை தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பூசினாற் போல இருக்கும் நடிகைகள் என்றால் அவ்வளவு இஷ்டமாக இருக்கிறது. கோலிவுட்டில் ஒல்லிக் குச்சி நடிகைகளாக நடித்துக் கொண்டிருந்தபோது வந்தவர் தான் ஹன்சிகா. புஸு புஸுன்னு இருக்கும் அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகா தான் நாயகி என்றாலும் அவரது நடிப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று தான் கூற வேண்டும். அதன் பிறகு மெது மெதுவாக நடிப்பைக் கற்றுக் கொண்டுவிட்டார்.

கோடம்பாக்கத்தின் பிசியான நாயகி
இன்றைய தேதிக்கு கோடம்பாக்கத்தில் ரொம்பவும் பிசியாக இருக்கும் நாயகி யார் என்றால் அது ஹன்சிகா தான். அவர் நடித்த சேட்டை அண்மையில் வெளியானது. மேலும் தீயா வேலை செய்யணும் குமாரு படம் வரும் 31ம் தேதியும், சிங்கம் 2 ஜூன் மாதமும் ரீலீஸ் ஆகின்றன. மேலும் 3 தமிழ் படங்கள், ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

நஸ்ரியா நஸீம்
கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்திருப்பவர் நஸ்ரியா நஸீம். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான நேரம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் படம் என்றாலும் நஸ்ரியா நடிப்பில் அசத்தி இருக்கிறார் என்று திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹன்சிகாவுக்கு போட்டி நஸ்ரியா?
நஸ்ரியா அடுத்ததாக ஆர்யா, தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார். அம்மணிக்கு நடிப்பும் நன்றாக வருகிறது. இந்நிலையில் ஹன்சிகாவுக்கு போட்டியாக நஸ்ரியா வருவார் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











