‘தல’ தம்பி மனைவியாக நடிக்கும் விஷாகா சிங்
விஷ்ணுவர்த்தன் படத்திற்கு பின்னர் சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறார் அஜீத். இந்த படத்தில் அஜீத் தம்பியாக மைனா ஹீரோ விதார்த் நடிக்க அவருக்கு ஜோடியாக லட்டு ஹீரோயின் விஷாகா சிங் நடிக்கிறார்.
விளம்பர உலகில் நுழைந்து இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்ட் வந்திருந்தாலும் கவனிக்கும் படியான வெற்றியை தரவில்லை விஷாகாசிங்.
ஆனால் லட்டு தின்ன ஆசையா படத்தின் வெற்றி விஷாகசிங்கை கவனிக்க வைத்துவிட்டது.
இதனால் பல வாய்ப்புகள் இவரின் வீட்டுக் கதவை தட்டுகிறதாம். இதன் பலனாகவே அஜீத் தம்பியின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த படத்தில் சந்தானம், ஜெயராம் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனராம்.

விதார்த் ஜோடியாக விஷாகா சிங்
சிறுத்தை சிவா படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அவரின் தம்பியாக வெயிட்டான ரோலில் விதார்த் நடிக்க அவருக்கு ஜோடி விஷாகா சிங்.

நினைச்சு கூட பார்க்கலை
‘பிடிச்சிருக்கு' படம் மூலம் தமிழில் அறிமுகமானேன். அதன்பிறகு இந்தி, கன்னடம், ஆங்கில படங்களில் நடிக்கச் சென்றுவிட்டேன். மீண்டும் தமிழில் நடிக்க வருவேன் என்று எண்ணவில்லை. ஆனால் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இப்போது அடுத்தடுத்து படவாய்ப்புகள் வருகின்றன என்கிறார் விஷாகா.

நான் அஜீத் ரசிகையாக்கும்...
அஜீத் படத்தில் நடிப்பதில் ரொம்பவே பூரித்து போயுள்ளார் விஷாகாசிங். ஏனெனில் அவர் அஜீத் ரசிகையாம். இது உணர்வு பூர்வமான கதை. இந்த படத்தின் பெரும்பகுதி ராஜமுந்திரி, ஹைதராபாத் பகுதியில் நடக்கிறது என்கிறார் விஷாகா.

டி.எஸ்.பி கூட வேலை பாக்குறேன்...
விஜயா புரடெக்சன் ஸ்ரீ நாகிரெட்டி தயாரிக்கும் அஜீத் படத்திற்கு முதன் முறையாக டிஎஸ்பி எனப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். அது என்னமோ தெரியலை இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் என்றாலே கதாநாயகிகளுக்கு உற்சாகம் வந்துவிடுகிறது. அதற்கு விஷாகாவும் விதிவிலக்கு இல்லை. டிஎஸ்பி இசையில் நான் நடிக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சும்மா இருக்க பிடிக்காது
இப்போது விக்ரம்பட் இயக்கும் இந்தி படம் மற்றும் ஃபரான் இயக்கும் ‘பக்ரே' படங்களில் நடிக்கிறேன். இது எனது அதிர்ஷ்டம். வீட்டில் அடைந்துகிடக்க எனக்கு பிடிக்காது. டூர், எழுதுவது, நடனம், சமையல் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











