சீறு பட நாயகியின் சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்.. கோலிவுட் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

Recommended Video

RIYA SUMAN CUTE INTERVIEW | SEERU MOVIE ACTRESS | FILMIBEAT TAMIL

சென்னை: ஜீவாவின் சீறு படத்தில் நாயகியாக நடித்துள்ள ரியா சுமனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கோலிவுட் ரசிகர்கள் பின் தொடர துவங்கி உள்ளனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், நவ்தீப், வருண் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் சீறு.

காலை 8 மணிக்கு திரையரங்குகளில் திரையிடப்பட்ட சீறு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கோலிவுட் என்ட்ரி

கோலிவுட் என்ட்ரி

மும்பையில் பிறந்து மாடலிங் துறையில் நுழைந்த ரியா சுமன், கடந்த 2016ம் ஆண்டு நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜ்னு படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். கடந்த 2018ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான பேப்பர் பாய் படத்தில் சந்தோஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது சீறு படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

தமிழ் கற்கும் ரியா

தமிழ் கற்கும் ரியா

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக சீறு படத்தில் நடித்துள்ள ரியா சுமன், தமிழ் மொழியை கற்று வருகிறார். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்கவும் ரியா முடிவு செய்துள்ளார். சீறு படத்தின் புரொமோஷனை முன்னிட்டு அவர் கொடுத்துள்ள பேட்டிகளில் கொஞ்சும் தமிழ் விளையாடுகிறது.

தமிழ் ரசிகர்கள்

கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ள ரியா சுமனின் சீறு படம் இன்று வெளியாகி வெற்றி நடைபோடுகிறது. ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள புதுமுகம் யார், என்ற ஆவலில் இன்ஸ்டாவில் தேடிய ரசிகர்களுக்கு இவரது க்யூட் மற்றும் ஹாட் புகைப்படங்கள் பிடித்துப் போக, ஏகப்பட்ட பேர் இந்த ஒரு வாரத்தில் ஃபாலோயர்களாக மாறியுள்ளனர்.

அமிதாப் உடன்

அமிதாப் உடன்

ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் கலக்கி வந்த ரியா சுமன், பல பெரிய பிராண்ட் விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார். அமிதாப் பச்சனுடன் கல்யாண் ஜுவல்லரி விளம்பரத்திலும் ரியா சுமன் நடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி உள்ளார்.

செம்ம ஹாட்

வெறும் வெள்ளை சட்டை மட்டும் அணிந்து கொண்டு, அதையும் ஒரு பக்கம் கழட்டி விட்டபடி செம்ம செக்ஸியாக ரியா சுமன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வருகிறது. மேலும், தட்டில் கேக் வைத்து சாப்பிட்டபடி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு பசியை கிளப்பியுள்ளார் ரியா சுமன்.

வாசுகியாக

வாசுகியாக

சீறு படத்தில் வாசுகி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரியா சுமன், வாசுகியாகவே வாழ்ந்துள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் நிறைந்த கதையாக உருவாகி உள்ள சீறு படத்தில் ஜீவாவுடன் ரியா சுமன் செய்யும் அழகான ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மனங்களை வென்றுள்ளது. விரைவில் தனது அடுத்த தமிழ் படம் குறித்த அப்டேட்டை ரியா வெளியிடுவார் என தாராளமாக எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X