பிரபுவுடன் போஸ் கொடுத்த சீதா.. கூட அந்த பிரபல நடிகையும் எப்படி நிக்கிறாங்க பாருங்க.. செம காம்போ!

சென்னை: நடிகர் பிரபுவுடன் நடிகை சீதா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நடிகை விஜய் சந்திரசேகரின் மகள் சுரக்ஷாவின் திருமணத்தில் கலந்து கொண்ட போது 80ஸ் மற்றும் 90ஸ் பிரபலங்களுடன் நடிகை சீதா எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆண்பாவம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சீதா நடிகர் பிரபுவுடன் குரு சிஷ்யன், வெற்றி மேல் வெற்றி உள்ளிட்டபல படங்களில் நடித்துள்ளார். பல வருடங்கள் கழித்து பிரபுவை சந்தித்த நிலையில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களுடன் மேலும் ஒரு பிரபல நடிகை போஸ் கொடுத்து நின்றதைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் அமைந்துள்ளனர்.

Seetha and Jayashree pose with Prabhu in a recent marriage function goes trending

விஜி சந்திரசேகர் மகள் திருமணம்: சமீபத்தில் சென்னையில் நடிகர் விஜய் சந்திரசேகரனின் மகள் சுரக்ஷா திருமணம் நடைபெற்றது. சூர்யா, சமுத்திரகனி, பிரபு, மீனா, சீதா, ஜெயஸ்ரீ, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், பல நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் தனித்தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

பிரபு உடன் சீதா: ரஜினிகாந்தின் குரு சிஷ்யன் படத்தில் பிரபுவுடன் இணைந்து நடித்த சீதா பொண்ணு பார்க்கப் போறேன், வெற்றி மேல் வெற்றி உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து திருமண விழா ஒன்றில் சந்தித்துக் கொண்ட பழைய ஜோடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளது.

Seetha and Jayashree pose with Prabhu in a recent marriage function goes trending

நடுவே ஜெயஸ்ரீ: 1987ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ஆனந்த் திரைப்படத்தில் ராதா மற்றும் ஜெயஸ்ரீ இணைந்து நடித்திருப்பார்கள். அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பிரபு நடித்த நாளைய மனிதன் திரைப்படத்திலும் ஜெயஸ்ரீ நடித்தார். சமீபத்தில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் நடிகை ஜெயஸ்ரீ பிரபு மற்றும் சீதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றன. அந்த காலத்தில் நடிகைகள் எல்லாம் ஒரே குடும்பமாக இருந்த நிலையில் தான் இன்னமும் எங்கேயாவது சந்தித்துக் கொண்டால் செம ஹேப்பியாக ஒன்றாக இணைந்து போட்டோக்கள் எல்லாம் எடுத்து மகிழ்கின்றனர் என்றும் இந்த கால நடிகர்கள் இதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X