சீதாவின் பிறந்த நாள் சர்ப்ரைஸ்.. அம்மாவிற்கு உதட்டில் நச்சுனு முத்தம்.. வாழ்த்தும் ஃபேன்ஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாகவும், பிறகு குணச்சித்திர வேடங்களிலும் நடிகை சீதா நடித்து வருகிறார். திரை உலகின் வெளிச்சம் புகழ் எல்லாம் இருந்தாலும் எளிமையான வாழ்க்கை முறையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வரும் சீதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்.
நடிகை சீதா: புதிய பாதை திரைப்படத்தில் பார்த்திபனோடு இணைந்து நடித்த போது இருவரும் காதலித்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், சில வருடங்களிலேயே இவர்களின் இல்லற வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பார்திபன், சீதா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்திய சீதா திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

பிறந்த நாள்: ஆனால், விவாகரத்திற்கு பிறகு சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இப்போது சீதாவிற்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக நடிப்பதை குறைத்துக் கொண்ட விவசாய நிலத்தில் நேரம் செலவிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் தனது தோட்டத்தில் வந்த காய்களை வைத்து ருசியாக சமைத்து வருகிறார். இயற்கையோடு இயற்கையாக இருக்கவே விரும்புவதாகவும், அதுவே மன நிறைவை தருவதாகவும் சீதா கூறி வருகிறார்.
அம்மாக்கு உதட்டில் நச்சுனு முத்தம்: இந்நிலையில், நடிகை சீதாவின் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சீதாவின் மகளான அபிநயா அம்மாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டி, உதட்டில் முத்தம் கொடுத்து மகிழ்ச்சியாக பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அந்த போட்டோவை அபிநயா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பலரும் நடிகை சீதாவிற்கு பிறந்த நாள் வாழ்துக்களை தெரிவித்து வருகின்றனர். சீதா, பார்த்திபன் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்த்து வந்தாலும், குழந்தைகள் எப்போதும் தாய், தந்தையோடு சேர்த்துத்தான் பயணிக்கின்றனர். இதை பார்த்திபனே பல முறை பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications