இந்தியில் திரிஷா
செல்வராகவன் இயக்க, அவரது தம்பி தனுஷ் நடிக்க உருவான புதுப்பேட்டை இப்போது இந்திக்குப் போகிறது. இந்தியிலும் செல்வாவே இயக்கவுள்ளார். ஹீரோவாக நடிக்கப் போவது அஜய் தேவ்கன்.

இந்த இரண்டுமே ஏற்கனவே தமிழில் அவர் இயக்கத்தில் வந்த படங்கள்தான். முதல் படம் 7ஜி ரெயின்போ காலனி. இப்படத்தின் இந்தி ரீமேக்கில், விவேக் ஓபராய் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி திரிஷா.
இதையடுத்து இன்னொரு இந்திப் படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் தனுஷ், சினேகா நடிப்பில் வெளியான புதுப்பேட்டையின் ரீமேக் இது.
7ஜி ரெயின்போ காலனி பெரும் வெற்றி பெற்ற படம். புதுப்பேட்டைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இரண்டுக்கும் இந்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications











