For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பீச்சில் பிகினியில் பீர் அடிக்கும் ஆண்டிரியா... செம வைரலாகும் போஸ்ட்

  |

  சென்னை : நடிகை, மாடல், பாடகி என பல திறமைகளைக் கொண்டவர் ஆண்டிரியா. கமல் நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 2, தரமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

  தற்போது மிஷ்கின் இயக்கும் பேய் படமான பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லீட் ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு சீனில் ஆண்டிரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார் மிஷ்கின். படத்திற்கு தேவையாக இருந்ததால் அவர் நடித்ததாகவும், ஆண்டிரியாவின் நிர்வாண காட்சிகளை படமாக்கும் போது செட்டில் மிக குறைந்த அளவிலான ஆட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக எடுக்கப்பட்டதாகவும் மிஷ்கின் கூறி இருந்தார்.

  சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு.. அவன் இவன் பட வழக்கில் ஆஜரான இயக்குநர் பாலா விடுவிடுப்பு! சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு.. அவன் இவன் பட வழக்கில் ஆஜரான இயக்குநர் பாலா விடுவிடுப்பு!

  இதற்கிடையில் தனது இன்ஸ்டாகிராமில் படுகிளாமரான தனது ஃபோட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களை சொக்க வைத்து வந்தார் ஆண்டிரியா. தனது அன்றாட நிகழ்வுகளையும் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களாகவும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஆண்டிரியா.

  மாலத்தீவில் ஆண்டிரியா

  மாலத்தீவில் ஆண்டிரியா

  இவர் சமீபத்தில் ஓய்விற்காக மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு ஹாயாக சுற்றி திரியும் தனது வீடியோக்கள் ஃபோட்டோக்களையும் வெளியிட்டார் ஆண்டிரியா. இதற்கு முன் பாத்ரூம் டூர் என்ற பெயரில் பாத்ரூமில் ஃபோட்டோஷுட் நடத்தினார். இப்போது மாலத்தீவிலும் தான் தங்கி இருக்கும் பீச் ஹவுசை வீடியோவில் சுற்றி காண்பித்துள்ளார்.

  வைரலாகும் பதிவுகள்

  வைரலாகும் பதிவுகள்

  கிளாமர் ஃபோட்டோஷுட், நீச்சல் குளத்தில் என்ஜாய் செய்த வீடியோக்களை வெளியிட்டார் ஆண்டிரியா. இந்த பதிவுகள் அனைத்தும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளின. இவரின் தீவிர ரசிகர்கள் ரெட் ஹாட்ர், ஃபையர் போன்ற எமோஜிக்களால் கமெண்ட் பகுதியை நிரப்பினர்.

  பிகினியில் பீர்

  பிகினியில் பீர்

  இந்நிலையில் இன்று பீச்சில் ஆரஞ்சு நிற பிகினியில் ஹாயாக படுத்திருப்பது போன்ற போஸ் ஒன்றை பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் ஆண்டிரியா. அதோடு நிறுத்தாமல் கடற்கரையில் கிளாசை வைத்து பீர் ஊற்றுவது போன்ற வீடியோ, பிகினியில் கடல் அலைகளில் கால் நனைத்தபடி பீர் குடிப்பது போன்ற வீடியோ ஆகியவற்றை பகிர்ந்துள்ளார் ஆண்டிரியா.

  வாவ்...தலைவி

  வாவ்...தலைவி

  வாவ்...தலைவி என ரசிகர்கள் இந்த பதிவுகளை கொண்டாடி வருகின்றனர். ஆண்டிரியா இவற்றை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்துள்ளது.

  பிசாசு 2 - ANDREA வுக்கு பாடியிருக்கேன் | SINGER PRIYANKA CHAT | FILMIBEAT TAMIL
  பரபரப்பை கிளப்பும் ஆண்டிரியா

  பரபரப்பை கிளப்பும் ஆண்டிரியா

  கடந்த சில நாட்களாகவே இன்ஸ்டாகிராமில் ஆண்டிரியா பதிவிடும் ஒவ்வொரு பதிவும் பரபரப்பாகி, அவரை பற்றி மீடியாக்கள் பேசும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கூட ரெட் கோட்டில் போஸ் கொடுத்த ஃபோட்டோவை பதிவிட்டிருந்தார். இதனால் விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆண்டிரியா நடிக்க போகிறார் என பரபரப்பாக பேசப்பட்டது.

  தொடரும் கவர்ச்சி

  தொடரும் கவர்ச்சி

  அதைத் தொடர்ந்து பேண்ட் அணியாமல் ஒயிட் ஷர்ட்டில், சார்பட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ் பிரதாப்பிடம் பாக்சிங் பயிற்சி பெறுவது போன்ற கவர்ச்சி வீடியோவை வெளியிட்டார் ஆண்டிரியா. இதுவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு பீச்சில் பிகினியில் சன் பாத் எடுத்தப்படி, பீர் குடிக்கும் ஃபோட்டோவும், வீடியோவும் செம வைரலாகி வருகிறது.

  English summary
  Andrea has created a stir by posting a pose like lying comfortably in an orange bikini on the beach. Andrea also shared a video of her pouring beer on a beach without stopping and a video of her soaking her feet in the ocean waves in a bikini.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X