எஸ்டிஆர் 49 படத்தில் சென்சேஷனல் ஹீரோயின்.. அவங்களே சொல்லிட்டாங்க.. கயாடு லோஹர் செம ஹேப்பி
சென்னை: தக் லைஃப் படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் 49ஆவது படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தில் அவர் கல்லூரி வாத்தியாராக நடிப்பதாக கூறப்படுகிறது. எஸ்டிஆர் 49 படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே படம் குறித்த அப்டேட் செய்திகளும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அண்மையில் இப்படத்தில் சந்தானம் நடிப்பது உறுதியானது. இந்நிலையில், இளைஞர்களை கவர்ந்த சென்சேஷனவல் ஹீரோயின் இப்படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
பார்க்கிங் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்பு நடிக்கும் 49ஆவது படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பட பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து படத்தின் அப்டேட் செய்திகளும் வெளியாகி சிம்பு ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தில் எஸ்டி ஆர் படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்பதை படக்குழு உறுதி செய்தது. அதன் பின்னர், இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர், சிம்புவை பாராட்டி சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

சாய் அபயங்கர்: பலருக்கும் யார் இந்த சாய் அபயங்கர் என்ற கேள்வி எழுந்திருக்கும். இவர், கட்சி சேர ஆல்பம் பாடல் மூலம் பிரபலம் ஆனார். இதன் பின்னர் மிகப்பெரிய இயக்குநர்களின் லிஸ்டில் இவரது பெயரும் அடிபட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத நேரத்தில் சூர்யா படத்தில் இசையமைக்க கமிட் ஆனார். அதைத்தொடர்ந்து சிம்பு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், எஸ்டிஆர் படத்தில் கமிட் ஆனது குறித்து பேசிய அவர், "சிம்புவை திரையில் பார்த்து ரசித்த நான், இன்று இவரின் படத்திற்கே இசையமைக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நடிகர் சந்தானம் மீண்டு எஸ்டிஆர் 49 படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இதனை நடிகர் சந்தானமே உறுதி செய்தார். அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸை அளித்து வருகிறார் சிம்பு.
கயாடு லோஹர்: எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குவாதக தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி படத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படம் வரலாற்று கதை என கூறப்படுகிறது. 50வது படத்தை முடித்த பின்னர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு 51ஆவது படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், எஸ்டிஆர் 49 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் கயாடு லோஹர். ஒரே படத்திலேயே தமிழில் சென்சேஷனல் ஹீரோயினாக மாறினார். சமூகவலைதளங்களை திறந்தாலே கயாடு லோஹர் பீவர் தான் தொற்றிக்கொண்டது. தமிழில் கவனம் செலுத்தி வரும் கயாடு லோஹர் தற்போது எஸ்டிஆர் 49 படத்தில் ஹீரோயினாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இப்படத்தின் மூலம் கயாடு லோஹர் பெரிய இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதர்வாவுடன் இதயம் முரளி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

3 ஹீரோயின்கள்: எஸ்டிஆர் 49 படத்தில் சிம்பு கல்லூரி வாத்தியாராக நடிக்கிறாராம். இப்படத்தில் கயாடு லோஹர் நடிப்பது உறுதியானது. அவரை தொடர்ந்து மமிதா பைஜூ, மிருணாள் தாஹூரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானது. மேலும், இப்படத்தில் கயாடு லோஹர் கல்லூரி பருவ இளம்பெண்ணாகவும், மமிதா பைஜூ வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், மிருணாள் தாஹூர் தான் சிம்புவுக்கு ஜோடியாக வர இருக்கிறாராம். எஸ்டிஆர் 49 படத்தில் 3 ஹீரோயின்களுக்கும் கடும் போட்டி இருப்பது உறுதிதான். ஆனால், சிம்பு படம் என்றால் நடிகைகள் மறுப்பு தெரிவிக்காமல் ஓகே சொல்கிறார்களாம். படம் நடிக்காமல் இருந்தாலும் சிம்புவை விரும்பும் நடிகர், நடிகைகள் இருக்கின்றனர் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











