காமெடி ஜாம்பவான் செந்திலுக்கு 75 வயது நிறைவு.. தடபுடலாக நடந்த பீமரத சாந்தி விழா!

சென்னை: நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு 75 வயது நிறைவடைந்ததை அடுத்து, குடும்பத்தினர் முன்னிலையில் பீமரத சாந்தி விழா நடைபெற்றது. இந்த போட்டோ தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் பலரும் அவருக்குவாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் செந்தில், ராமமூர்த்தி மற்றும் திருக்கம்மல் தம்பதியினருக்கு 3வது மகனாக
1951ம் ஆண்டு பிறந்தார். தனது 12வது வயதில் வீட்டை விட்டு வெளியே வந்த செந்தில், எண்ணெய் ஆட்டும் வேலையிலும், மதுபானக்கடையில் வெயிட்டராக வேலை செய்து வந்தார். வேலை செய்து கொண்டே சினிமா வாய்ப்பு தேடி அலைந்த போது தான், நாடக கம்பேனி ஒன்றில் வேலை கிடைத்தது. இதையடுத்து,'ஒரு கோவில் இரு தீபம்' படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

Senthil age Wife

நடிகர் செந்தில்: அதன் பின் பல படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்து வந்த செந்திலுருக்கு, 'வைதேகி காத்திருந்தால்' படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றிக்கு பின் எங்கு திரும்பினாலும், கவுண்டமணி செந்தில் காமெடி தான் பேசப்பட்டது, இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படத்தில் சேர்ந்து நடித்தனர்.

இரண்டு மகன்கள்: சினிமாவில் சாதித்த செந்தில்1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மணிகண்டன் பிரபு பல் மருத்துவராக இருக்கிறார். இவர் செந்திலுடன் இணைந்து 'தடை அதை உடை' படத்தில் நடித்துள்ளார். இரண்டாவது மகன் ஹேமசந்திர பிரபு 'அகத்தியா' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

75 வயது நிறைவு: இந்நிலையில் நடிகர் செந்திலுக்கு 75வது வயது நிறைவடைந்ததை அடுத்து, உலக புகழ் பெற்ற அமிர்தகடேஷ்வரர் உடனாகி அபிராமி அம்மன் கோவிலில் பீமரத சாந்தி விழா குடும்பத்தினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில், நடிகர் செந்தில் தனது மனைவிக்கு கழுத்தில் மாலை அணிவித்து, சில சடங்குகளும் நடைபெற்றன. இந்தபுகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. பலரும் செந்திலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X