கழுத்தை சுத்தி மாராப்பு.. அந்த இடத்தில் டாட்டூ.. 40 வயதில் அட்ராசிட்டி செய்யும் அர்ச்சனா மாரியப்பன்!
சென்னை: தமிழ் சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் மிரட்டி வரும் அர்ச்சனா மாரியப்பன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன. மாராப்பை வித்தியாசமாக கழுத்தில் சுற்றி ஸ்டைலிஷ் மற்றும் கிளாமரான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன.
நடிகை அர்ச்சனா மாரியப்பன்: 1985 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்த அர்ச்சனா மாரியப்பன், சின்னத்திரையில் பல ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்தார். குறிப்பாக பொன்மகள் வந்தாள் தொடரில் மூத்த மருமகளாக நடித்தது மூலம் அதிக வரவேற்பை பெற்றார். அதோடு 'பொன்னுஞ்சல்', 'வாணி ராணி', 'அழகி', 'நீலி', 'வள்ளி', 'அழகு', 'வேலைக்காரன்' உள்ளிட்ட பல தொடர்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில்: சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தனது தடத்தை பதித்துள்ள அர்ச்சனா, 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'கலகலப்பு', 'தீய வேலை செய்யணும் குமாரு', 'வெள்ளக்கார துரை', 'முத்தின கத்திரிக்காய்', 'ஸ்கெட்ச்', 'நாடோடிகள்', 'பஞ்சுமிட்டாய்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்புடன் சேர்த்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
கழுத்தை சுத்தி மாராப்பு: தற்போது வெளியிட்டுள்ள புதிய போட்டோக்களில், பிரவுன் நிற மாராப்பை வித்தியாசமாக ஸ்டைல் செய்து கவர்ச்சியான போஸில் காட்சி அளித்துள்ளார். மிக குறைந்த மேக்கப்பில், கூர்மையான பார்வையுடன் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக மூக்குத்தி, டாட்டூ மற்றும் சிம்பிளான ஹேர் ஸ்டைல் ஆகியவை அவரது லுக்கை மேலும் தனித்துவமாக காட்டுகின்றன. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், 40 வயதுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க என்றும், சீரியலில் வில்லி ரியலில் இவ்வளவு ஸ்டைலிஷா? என கமெண்ட் செய்து வருகின்றனர். அதேசமயம் சிலர் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஏற்கனவே பேசியிருந்த அர்ச்சனா, நான் கவர்ச்சியாக போட்டோ போடுவது என்னோட விருப்பம். பிடித்திருந்தால் பாருங்கள்.. பிடிக்கவில்லை என்றால் ஸ்க்ரோல் பண்ணிட்டு போங்க. அதற்காக தவறான கமெண்ட்ஸ் போடுவது சரியில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது அவரது இந்த லேட்டஸ்ட் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications