முத்தம் தர ஏற்ற இடம்.. முகத்துல எந்த இடம்..கேப்ரில்லாவை வம்புக்கு இழுக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். இதைத்தொடர்ந்து, தனுஷ் நடித்த த்ரி படத்தில், ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், 'அப்பா' படத்திலும் குட்டி பெண்ணாக நடித்திருந்தார். அதன்பின் சினிமா பக்கம் வராத இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி விடலாம் என்கிற எண்ணத்தோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் டைட்டிலை பெற முடியாது என்று தெரிந்து கொண்ட கேப்ரில்லா, பணப் பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் காவியா என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். தற்போது, இவர் சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், மருமகள் சீரியலில் நடித்து வருகிறார். சின்ன பெண்ணாக கேப்ரில்லா, உடல் எடை அதிகரித்து, நல்லா குண்டு குண்டுனு இருந்தார். இதனால் பல சங்கடத்தை அனுபவித்த இவர், தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறி உள்ளார்.

gabriella charlton photo
Photo Credit:

நடிகை கேப்ரில்லா: உடல் எடையை எப்படி குறைத்தேன் என்கிற ரகசியத்தை பேட்டி ஒன்றில் கூறிய கேப்ரில்லா, எல்லோரும் ஜிம்முக்கு வெயிட் குறைக்கத்தான் போவாங்க, ஆனால், நான் வெயிட்டை ஏத்த ஜிம்முக்கு போனேன், ஒல்லியாக இருக்கும்போது வெயிட் போடுவதற்காக ஜிம்முக்குப் போனேன். குண்டாக வேண்டும் என்று ஒரு நாளைக்குப் பத்து இட்லி சாப்பிட்டு இருக்கிறேன். அது ஓவர் வெயிட்டாகிவிட்டதால், இப்போது உடலை குறைத்து இருக்கிறேன். நான் எந்த உடை அணிந்தாலும், அதைப்பார்த்து மற்றவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள். அனைவரின் பார்வையும் ஆபாசமாக மாறிவிட்டதால், கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தேன் என்றார்.

கருப்பு புடவையில் தேவதை: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லாவை இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ளி மூன்று மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருக்க அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் கருப்பு புடவையில், அந்த சின்ன இடையை மறைத்து போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் முத்தம் தர ஏற்ற இடம்.. முகத்துல எந்த இடம் என பாட்டுப்பாடி அவரை வம்புக்கு இழுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X