ரூ.2லட்சம் தரேன்..எனக்கு தெரியாமலே பேரம் பேசிய நபர்..செருப்பால் அடித்தேன்..நடிகை ஜெயலட்சுமி ஆதங்கம்!

சென்னை: சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஜெயலட்சுமி, சினிமாவில் தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசி உள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் பாஜக கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.

சினிமாவில் படவாய்ப்பு இல்லாததால்,சின்னத்திரைக்கு சென்ற இவர், முன்னணி நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் வில்லியாகவும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே இவருக்கு சிறிய சிறிய சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. அதன்படி மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Serial actress jayalakshmi emotional interview

சீரியல் நடிகை ஜெயலட்சுமி: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஜெயலட்சுமி, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். படிக்க வைக்கக்கூட வீட்டில் வசதி இல்லாததால், 12வது படித்துக்கொண்டு இருக்கும் போதே கல்யாணம் செய்துவைத்தார்கள். பள்ளியில் நடிக்கும் போதே எனக்கு நாடகம், டான்ஸ் மீது ஈடுபாடு இருந்தது. அதன் பிறகு வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போது தான் ராதிகா அவர்களுடன் இணைந்து நடித்தேன் இந்த கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

நடிக்கவே விடல: இன்று நான் ஒரு நடிகையாக இருக்கிறேன் என்றால், அதன்பின் பல வலி இருக்கிறது. ஒரு பிரபலமான இயக்குநர் ஒருவரின் சீரியலில் நடிக்க என்னை அழைத்தார்கள், தினமும் காலை வீட்டுக்கு கார் வந்து விடும், இரவும் வீட்டில் ட்ராப் செய்துவிடுவார்கள். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மாத்தான் உட்கார்ந்து இருக்கனும் எந்த ஒரு சீனிலும் என்னை நடிக்க வைக்கவில்லை. இப்படியே 14 நாட்கள் படப்பிடிப்புக்கு நான் சும்மா சும்மா போய் வந்தேன். அதன் பிறகுதான் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த இயக்குநர் என்னிடம் அப்படி நடந்துகொண்டார் என்பதை புரிந்து கொண்டேன்.

Serial actress jayalakshmi emotional interview

செருப்பால் அடித்தேன்: அனைத்து துறையிலும் இருக்கும் பிரச்சனை போல சினிமா துறையிலும் பெண்களுக்கு பிரச்சனை இருக்கிறது. பெண்கள் இது நமக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். பிரச்சனை நடக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு, பல ஆண்டுகள் கழித்து, இயக்குநர் குறித்தோ, நடிகர் குறித்தோ பேசுவது சரியாக இருக்காது. உங்களிடம் ஒருவர் தவறாக நடந்து கொள்கிறார் என்றால், உடனே அது தப்பு என்று சொல்லுங்கள் அப்போது தான் அவர் அடுத்தவர்களிடம் அந்த தவறை செய்ய மாட்டார். ஒருமுறை பார்க்கில் என்னை ஒருவன் தவறான இடத்தில் தொட்டான், நான் அவனை துரத்திப்பிடித்து செருப்பால் அடித்தேன். அப்போது தான், அவன் மற்ற பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள மாட்டான்.

எனக்கு 2 லட்சம் தருவதாக பேரம்: என்னத்தான் நல்ல நடிகையாக இருந்தாலும், சமுதாயத்தின் பார்வையில் நடிகையின் மீது ஒரு தவறான எண்ணம் இருக்கிறது அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும். ஒரு முறை எனக்கு வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று ஒரு தொலைபேசியில் இருந்த மெசேஜ் வந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது தான், அதில், பல நடிகைகளின் புகைப்படத்தை வைத்து பேரம் நடக்கிறது. அதில் எனக்கு இரண்டு லட்சம் தருவதாக பேரம் பேசினார்கள். இப்படி நடிகர்களுக்கு தெரியாமலே பல நடக்கிறது என்று நடிகை ஜெயலட்சுமி வருத்தத்துடன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X