சின்ன வயதில் சீரியல் நடிகைக்கு நடந்த கொடூரம்... கண்ணீர் விட்டு கதறிய நடிகை!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் சீரியலில் லீட் ரோலில் நடித்த நேகா கவுடா தனது சிறு வயதில் நடந்த மிகவும் மோசமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். மேலும், குட் டச் பேட் டச் பற்றிய புரிதல் வந்த பிறகு தான் அந்த சம்பவம் இன்று மறக்க முடியாத பயத்தை தருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளன. இதில், சில சீரியல் நடிகைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். சில சமயங்களில் பிடித்த சீரியல்களை பட்டியிலிட்டு பேசுவார்கள். சில சீரியல்களின் கதையை தாண்டி அதில் நடித்தவர்கள் மட்டுமே நியாபகம் இருக்கும். அந்த வகையில் பாவம் கணேசன் சீரியலில் கலக்கப்போவது யாரு நவீனுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நேகா கவுடா. சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு சீரியலில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்துள்ளார்.

Neha gouda Serial Actress Vijay Tv

பெங்களூரை சேர்ந்த நடிகை: நடிகை நேகா கவுடா பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ், கன்னட மொழிகளில் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர், கடந்த 2018ஆம் சந்தன் கெளடா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவ்வப்போது இருவரது புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாவது உண்டு. திருமணம் முடிந்து 6 வருடங்களுக்கு பிறகு நேகா - சந்தன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்.

9 வயதில் நடந்த துயரம்: திருமணம், குழந்தை என குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் நேகா கவுடா அண்மையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவரது சிறுவயதில் நடந்த கொடூரமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், "நான் 4ஆவது படித்தபோது எனக்கு மிகவும் மோசமான ஒரு சம்பவம் நடந்தது. அன்று எனக்கு துணையாக வீட்டில் அம்மா இல்லை, பாட்டி மட்டுமே இருந்தார். நான் தூங்கி எழுந்ததும் அம்மாவை தேடி வெளியே வந்தேன்.

Neha gouda Serial Actress Vijay Tv

அப்போது என் பக்கத்து தெருவை சேர்ந்த ஒருவர் என் கைகளை பிடித்து உன அப்பாவை எனக்கு நன்றாக தெரியும். வா உனக்கு பிடித்த வாட்ச் வாங்கி தருவதாக தெரிவித்தார். பின், வாட்ச் கடைக்கு செல்வதாக அழைத்து சென்று வீட்டிற்குள் அடைத்து வைத்து என்னிடம் மிக மோசமாக நடந்து கொண்டான். அங்கு எனக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் அழுது தவித்தேன். என்னிடம் கத்தியை காட்டி மிரட்டினான். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. பின்பு அந்த முரடனிடம் இருந்து எப்படியோ தப்பி வீடு வந்து சேர்ந்தேன்" என கண்ணீருடன் தெரிவித்தார்.

குட் டச் பேட் டச் பற்றிய புரிதல்: நானும் வளர வளர பள்ளியில் குட் டச் பேட் டச் பற்றி விளக்கிய போது தான் புரிந்தது. ஆனால், அந்த சம்பவத்தை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. இப்போது நினைத்தாலும் பயம் தான் வருகிறது என நேஹா கெளடா தெரிவித்தார். மேலும், நடிகைகள் மட்டும் அல்ல பொதுவாக பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் வந்தால் பயப்படாமல் எதிர்கொள்ள கற்றுகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X