நிர்வாணமாக நடிக்க தயார்..சீரியல் நடிகை ரேகா நாயர் அதிரடி முடிவு!

சென்னை : சின்னத்திரை நடிகை ரேகா நாயர் கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்று தடாலடியாக கூறியுள்ளார்.

வித்தியாச விரும்பியான பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரவின் நிழல் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. படம் பார்த்த பலரும் பார்த்திபனின் திறமையை பார்த்து வியந்து பாராட்டி வருகிறார்கள்.

வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா, ரேகா நாயர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்‌ஷன்ஸ்' தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இரவின் நிழல்

இரவின் நிழல்

இரவின் நிழல் திரைப்படம் கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் Non Linear முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பம்சம். நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா எனும் புது நாயகி இதில் அறிமுகமாகியுள்ளார்.

மகிழ்ச்சியில் பார்த்திபன்

மகிழ்ச்சியில் பார்த்திபன்

இரவின் நிழல் படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகி உள்ள நிலையில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் பார்த்திபனும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார்.

ரேகா நாயர்

ரேகா நாயர்

இத்திரைப்படத்தில் நடிகை பிரிகிடா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்துள்ளார். அதே போல ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரேகா நாயரும் ஒரு காட்சியில் மேலாடை இன்றி அரைநிர்வாணமாக நடித்திருக்கிறார். இதில் எந்த கதாபாத்திரம் முகம் சுளிக்கும் அளவுக்கு ஆபாசமாக இல்லை, இதனால் பலர் அவர்களை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரேகா நாயர், கலையை கலையாக பார்க்க வேண்டும், ஆபாசமாக பார்த்தால் அதில் ஆபாசம் மட்டும்தான் தெரியும்.

நிர்வாணமானமாக நடிக்க ரெடி

நிர்வாணமானமாக நடிக்க ரெடி

அரைநிர்வாண காட்சியில் நடித்ததற்காக பலர் என்னை பாராட்டினார்கள், சிலர் என்னை காசுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பியா என்று கேட்டு கண்டபடி திட்டி வருகிறார்கள். எனக்கு படங்களில் ஹீரோயினா நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை பிச்சைக்காரியாகவோ, விபச்சாரியாகவோ தயங்காமல் நடிப்பேன். ஏன் கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாகவும் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். ஏன் என்றால், கதை தான் முக்கியம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X