திருமணமாகி 5 வருஷமாச்சு.. எப்ப ப்ரெக்னன்ட் ஆவீங்க.. என்னை காயப்படுத்தும் கேள்வி.. நடிகை வேதனை!

சென்னை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் தான் ரேஷ்மா முரளிதரன். தற்போது இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமே செல்லமே சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும் நடிகர் மதன் பாண்டியனுக்கும் 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், சிலர் என்னை கேட்கும் கேள்வி என்னை காயப்படுத்துவதாக கூறியுள்ளார்.

நடிகை ரேஷ்மா முரளிதரன்: கேரளாவை சேர்ந்த ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும் போதே' பூவே பூச்சூடவா' என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் இவருக்கு எக்கசக்க ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது. அந்த சீரியலைத் தொடர்ந்து, கலர்ஸ் தமிழில் சேனலில், 'அபி டெய்லர்' என்ற சீரியலில் நடித்தார். பூவே பூச்சூடவா சீரியலில் தன்னுடன் நடித்த நடிகரும், தொகுப்பாளருமான மதன் பாண்டியனை காதலித்த நிலையில் 2021ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Reshma Muralidaran interview
Photo Credit:

சங்கடமா இருக்கு: திருமணத்திற்கு பிறகு ரேஷ்மா, விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற தொடரில் நடித்தார். ஆனால், அந்த சீரியல் திடீரென முடிவுக்கு வந்தது. தற்போது ரேஷ்மா சன் தொலைக்காட்சியில் செல்லமே செல்லமே என்கிற சீரியலில் நடித்து வருகிறார். அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ள ரேஷ்மா முரளிதரன், எனக்கு திருமணமான பிறகு, என்னை சீரியலில் கமிட் செய்வதற்கு முன்பு ப்ரெக்னன்ட் ஆவீங்களா? எதாவது பிளான் இருக்கா என்று கேட்டுவிட்டுத்தான் கமிட் செய்கிறார்கள். ஒரு முறை இல்லை மூன்று நான்கு முறை நன்றாக கேட்டு தெளிவுபடுத்திக் கொள்கிறார்கள். இது எனக்கு சங்கடமாக இருந்தாலும், ஒரு பக்கம் பார்க்கும் போது சரிதான் என்று தோன்றுகிறது. சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போது, திடீரென கர்ப்பமாகிவிட்டால், அந்த சீரியலில் இருந்து விலகவேண்டி வரும், அது சீரியல் டீமுக்குத் தான் பிரச்சனை என்பதால் இப்படி கேட்கிறார்கள் என அந்த பேட்டியில் நடிகை ரேஷ்மா முரளிதரன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: interview பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X