ரெட்டை குடுமில பாப்பா லுக்கு.. ஆனா பண்ற வேலை? கிளாமர் உடையில் கிறங்கவைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!

சென்னை: சினிமா மற்றும் சீரியலில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிகையாக மட்டுமில்லாமல் பிஸ்னஸ் உமனாக இருந்து வருகிறார். ஆனால், எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும் தனது சப்க்ரைபர்களுக்காக தவறாமல் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி: தெலுங்கு சினிமாவில் பல நல்ல படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ஆவர். இவர் 2015ம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ரேஷ்மா பசுபுலேட்டி அந்த படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும், அந்த படத்தின் கதாப்பாத்திரன் பெயரை வைத்தே மொத்த காமெடி நகரும். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்யலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக சாதுவான ராதிகா கதாபாத்திரத்தில் நடித்தார்.

Reshma pasupuleti instagram
Photo Credit:

ரெட்டை குடுமி: நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி: தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் 3 பெண்களுக்கு அம்மாவாக சாமுண்டீஸ்வரியாக என்கிற கெத்தான மாமியாராக நடித்து வருகிறார். சீரியலில் புடவையைக் கட்டிக்கொண்டு கெத்தாக வலம் வரும் இவர், நிஜ வாழ்க்கையில் படு மாடர்னாக இருக்கிறார். தற்போது தனது இன்ஸ்டா ஃபாலோயர்களைக் குஷிப்படுத்துவதற்காகக் குட்டி பாப்பா போல ரெட்டை குடுமி போட்டுக்கொண்டு, மாடர்ன் ஆடையில் பவ்யமாகவும் படு கிளாமராகவும் போஸ் கொடுத்துள்ளார்.

பாப்பா செய்யுற வேலையா?: கண்ணாடி, நெஞ்சில் டாட்டூ மற்றும் கிளாமர் லுக் கலந்த இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், லுக்கு மட்டும் பாப்பா போல இருந்தா போதாது என்றும் இதெல்லாம் பாப்பா செய்யுற வேலையா? என கமெண்ட் பாக்ஸில் செல்லமாகக் கொஞ்சி ஜொள்ளு விட்டு வருகின்றனர். இவரின் இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைபர் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் நடிகை ரேஷ்மா, அவர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி கவர்ச்சியான போட்டோக்களை அப்லோடு செய்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X