சைடு ரோலுக்குக்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் கேக்குறாங்க.. வேற வேலையே இல்லையா?.. சீரியல் நடிகை பளார்
சென்னை: பாரதி கண்ணம்மா 2, சக்திவேல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பிரசாத். இவை தவிர்த்து கெட்டிமேளம், நெஞ்சாத்தியே உள்ளிட்ட சீரியல்கள், வெப் சீரிஸ்கள் என தொடர்ந்து நடித்துவருகிறார். எப்படியாவது பெயர் பெற்ற நடிகையாக வேண்டும் என்று உழைத்து வரும் அவர் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி போல்டாக பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.
சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று பல காலமாக உண்டு. அதனை உறுதிப்படுத்தும்படிதான் சினிமாவில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் ஆண்களாக இருக்கிறார். பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர் எல்லாம் ரொம்பவே கம்மிதான். நடிப்பில் பெண்கள் அதிக அளவு இருந்தாலும் அவர்களுக்கு உருவாக்கப்படும் பிரச்னை மற்ற பெண்களை திரைத்துறைக்குள் வருவதற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அப்படி உள்ள பிரச்னைகளில் தலையாய பிரச்னைதான் அட்ஜெஸ்ட்மெண்ட்.

அட்ஜெஸ்ட்மெண்ட்: சினிமாவில் அறிமுகமாக வேண்டுமா, தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமா அதற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சிலர் ஓபனாகவும், மறைமுகமாகவும் நடிகைகளிடம் அப்ரோச் செய்யும் வழக்கம் காலங்காலமாக இருந்துவருகிறது. பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இந்தக் காலத்திலும் அந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் ஓய்ந்தபாடில்லை என்பதுதான் கள எதார்த்தம்.
வாய் திறந்த நடிகைகள்: சில வருடங்களுக்கு முன்னர் எல்லாம் தங்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்தால் சைலெண்ட்டாக மறுத்துவிட்டு அதனை பொதுவெளியில் சொல்லாமல் இருந்தார்கள் நடிகைகள். இப்போது பலரும் அதுகுறித்து வெளிப்படையாக பேசிவருகிறார்கள். அது ஆரோக்கியமான விஷயமான ஒன்றகாவே பார்க்கப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன், நடிகை வரலட்சுமி உள்ளிட்டோரும் தங்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்ததாக ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரேஷ்மா பிரசாத்: இந்நிலையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்துவரும் ரேஷ்மா பிரசாத் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓபனாக பேசியிருக்கிறார்.அவர் அளித்த பழைய பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசுகையில், "சிறிய ரோலாக இருந்தாலும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி ஓபனாக கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா?
எல்லோரும் பண்ணுங்க: எல்லோரும் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணுவாங்க நீங்களும் பண்ணுங்க என்று பேசியிருக்கிறார்கள். ஆடிஷன் போனாலே இதே பேச்சுத்தான் இருந்தது. அதன் காரணமாக அப்படிப்பட்ட நடிப்பே எனக்கு தேவையே இல்லை என முடிவு செய்து நான் ஆடிஷனுக்கு போவதையே நிறுத்திவிட்டேன். ப்ரொஃபைல் ஃபார்ம் அனுப்புவார்கள். அதில்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். சொல்லப்போனால் சைடு ரோல் சான்ஸ் வேண்டுமென்றாலும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யுங்கள் என்று சொல்வார்கள். நான் அதற்கெல்லாம் நோ சொல்லிவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











