என் முதல் சம்பளம் 300 ரூபாய்.. என்னால மறக்கவே முடியாது.. நடிகை சந்தோஷி !

சென்னை : நான் வாங்கிய முதல் சம்பளம் 300 ரூபாய் தான், அது என் வாழ்நாளில் மறக்கவே முடியாத தருணம் என்று நடிகை சந்தோஷி கூறியுள்ளார்.

நடிகை சந்தோஷியை நாம் பல படங்கள் மற்றும் நாடகங்களில் பார்த்து இருப்போம். தற்போது நாடகங்களில் நடிப்பதை கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைத்து இருக்கிறார் சந்தோஷி. இவருக்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனை சந்தோஷத்துடன் நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் சந்தோஷி.

 Serial actress santhoshi interview

மேலும் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் தற்போது நான் பிஸியாக இருக்கும் நேரங்களில் அவன் தான் தங்கைகளை பார்த்து கொள்கிறான் என்று கூறினார் . மேலும் நான் என் இரட்டை குழந்தைகளை ஒரே மாதிரியான ஆடை எல்லாம் அணிவித்து விடுவதில்லை வேறு வேறு ஆடைகள் தான் போட்டு விடுகிறேன் எதிர்காலத்தில் சிறு சிறு சண்டைகளை அது தடுக்கும் என்று இப்படி செய்து வருகிறேன் என்றார்.

மேலும் தான் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி கூறினார். நான் 8 வயதில் இருந்தே நடித்து வருகிறேன். நிறைய இடங்களுக்கு செல்லும் போது திடீரென சிலர் ஆச்சரியத்துடன் கத்தி நீதானா அந்த நாடகத்துல நடிக்குற பொண்ணானு கேட்டு திருஷ்ட்டி எடுப்பாங்க, அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறினார் .

 Serial actress santhoshi interview

எனது 13 வயதில் ஏவிஎம் தயாரித்த நாடாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். அப்போது, எனது முதல் சம்பளமான 300 ரூபாய்யை வாங்கினேன் அது என்னால் மறக்க முடியாத தருணம் என்று கூறினார் .

என் வாழ்கையில் நான் நடித்ததில் மிக முக்கியமான நாடகம் என்றால் அது இளவரசி நாடகம் தான் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டார். இந்த நாடகம் 2010 முதல் 2014 வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டது .

 Serial actress santhoshi interview

சந்தோஷி தற்போது துணிக்கடை வைத்துள்ளார், அதில் பல டிசைனர் ஒர்க்ஸ் மற்றும் பெண்கள் அழகு சாதனங்கள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய கடையை நிர்வாகம் செய்து வருகிறார். இதனை பற்றி கேட்கும் போது வருடத்தில் நான்கு படம் நடித்தாலும் பல்வேறு நேரங்களில் சும்மா இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்னால் அப்படி இருக்க முடியாது அதனால் தான் இந்த கடையை நடத்தி வருகிறேன் என்று கூறினார் .

சந்தோஷி தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் ஜெமினி டிவியில் 'நம்பர் 23 மகாலட்சுமி நிவாஸம்' என்ற தொடரிலும் நடித்து இருக்கிறார். சந்தோஷி கடைசியாக தமிழில் போர்களம் படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு தொடர்ந்து நாடகத்தில் நடித்து வந்த சந்தோஷி கொஞ்ச வருடங்களாக நடிக்கவில்லை மீண்டும் அவர் நாடகங்கள் அல்லது படங்களில் நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X