Shivani Narayanan: இதற்கு மேலும் காத்திருக்க முடியாது.. ரூட்டை மாற்றிய ஷிவானி நாராயணன்!
சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது திறமையாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியின் 'பகல் நிலவு' தொடர் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'பிக்பாஸ் தமிழ் சீசன் 4' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் புகழ் அடைந்தார். இணையத்தில் இப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் தற்போது தனது ரூட்டை மாற்றி இருக்கிறார்.
பகல் நிலவு, சரவணன் மீனாட்சி 3, ராஜா ராணி, ரெட்டை ரோஜா என பல சீரியலில் நடித்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். அந்த சீரியலைத் தொடர்ந்து மேலும் பிரபலமாவதற்காக பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டார். ஆனால், அதில் அவரால் தாக்குபிடிக்கமுடியாமல் பாதியிலேயே வெளியேறினார். அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக இரண்டே இரண்டு சீனில் நடித்திருந்தார். அதன்பின், வீட்டில விசேஷம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என பல படங்களில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் பம்பர் என்ற படத்தில் வெற்றிக்கு ஜோடியாக ஹீரோயினாகக்கூட நடித்தார். ஆனால், அந்த படம் வெளியானதுக்கூட யாருக்கும் தெரியவில்லை.
ஷிவானி நாராயணன்: பெரிய கனவோடு சினிமாவிற்கு வந்த ஷிவானி நாராயணனுக்கு எதிர்பார்த்தபடி சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால், மீண்டும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்தார். அதுவும் அலுத்துப்போனதால், ஷிவானி நாராயணன் தற்போது தனது ரூட்டை மாற்றி மாடலிங் துறையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஷிவானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிற மார்டன் உடையில், கேட்வாக் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ஷிவானி பதிவிட்ட சிறிது நேரத்திலேயே ஆறு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும், பலரும் இது சரியான முடிவு தான் என கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி: இணையத்தில், ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன், அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் சில போட்டோக்களை பகிர்ந்து இருந்தார். அந்த போட்டோவில் ஷிவானியின் உதடு மற்றும் மூக்கு வித்தியாசமாக இருந்ததால், அதைப்பார்த்த ரசிகர்கள் மூக்கில் சர்ஜரி செய்தீர்களா... அது உங்களுடைய முகத்தையே மாற்றி விட்டது என்று கேட்டு இருந்தனர். இதுகுறித்து அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷிவானி நாராயணன், நான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணல. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் என்று பலர் சொல்கிறார்கள். இந்த செய்தி கடந்த சில நாட்களாகவே பரவிவருகிறது. உண்மையை சொல்லணும்னா அப்படி நான் செய்யவில்லை. அப்படி செய்வது ஈஸி இல்ல, அதற்கு பல லட்சங்கள் செலவாகும், ஈசியாக எல்லாருமே அதை பண்ணிட முடியாது. கண்டிப்பாக நான் அதை பண்ணல. நான் கடந்த ஒரு வருடமாக டயட் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன். அதனால கூட என்னுடைய முகம் அமைப்பு மாறி இருக்கலாம் என இணையத்தில் பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எது எப்படியாக இருந்தாலும், ஷிவானி நாராயணனிடம் முன்பு இருந்த அந்த க்யூட்டான அழகி மிஸ்ஸிங் தான் என இணைவாசிகள் கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











