கொள்ளை அழகில் வாணி போஜன்.. புதிய போட்டோசூட்
சென்னை : வாணி போஜனின் புதிய போட்டோசூட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் சிவப்பு நிற ஆடையில் கொள்ளை அழகாக காட்சி அளிக்கிறார்.
சின்னத்திரை நயன்தாரா என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் வாணி போஜன். விமான பணிப்பெண்ணாக இருந்து மாடலிங் மற்றும் சின்னத்திரையில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் கால் பதித்து விட்டார் சின்னத்திரை நயன்தாரா.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தெய்வமகள் என்ற தொடர் மூலம் தமிழ் குடும்பங்கள் அனைவரின் மனதிலும் குறிப்பாக பெண்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் வாணி போஜன். மாடலிங் துறையில் இருக்கும் போதே சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் , தனியார் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்களின் வரிசையில் தற்போது சேர்ந்துள்ளார் வாணி போஜன், இவர் தொடர்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் சரியான வாய்ப்புக்காகவும் கதைக்காகவும் காத்துஇருந்தார்.

பின் சீரியல்கள் முடிந்ததும் தெலுங்கு படம் ஒன்றில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட வாணி, மிக்கு மாத்ரமே செப்பிதா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது, படமும் ஹிட் ஆகி இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைடுத்து தமிழில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் படத்தில் வாணி போஜன் நடிக்கிறார்.
சீரியல்களில் நடிக்கும் போதே கதைகளை தேர்வு செய்யது நடித்த இவர், படங்களிலும் அதே பார்முலாவையே கடைப்பிடித்து வருகிறார். வாய்ப்புக்கள் பல வந்த வண்ணம் உள்ளதால் அடிக்கடி போட்டோஷுட்கள் எடுத்து, அதன் புகைபடங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இவர், பதிவிடும் புகைப்படங்களை பார்க்க இவர் பின்னர் ஒரு கூட்டமே உள்ளது. எப்போது இவர் போட்டோஸ் போட்டாலும் அது பெரிய அளவில் வைரல் ஆகி விடுகிறது. அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

புத்தாண்டை ஒட்டி இவர் புகைப்படங்களை எடுத்து அதை வெளியிட்டு வருகிறார். இதில், சிவப்பு நிற ஆடையில் விதவிதமான போஸ்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கொள்ளை அழகாக உள்ளார் சின்னத்திரை நயன்தாரா என்று அவரின் ரசிகர்கள் அவரை வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











