அட, இங்க மட்டும்தானா அது இருக்கு.. நடிகை ப்ரியா பவானிசங்கர் கோபம்
நடிகை ப்ரியா பவானிசங்கர் எல்லா துறைகளிலும் பாலியல் வன்கொடுமை இருக்கிறது என்று கூறியிருந்தார்.
சென்னை: அட, சினிமாவில் மட்டும்தானா.. எல்லாத் துறையிலும் தாங்க பாலியல் வன்கொடுமை இருக்கிறது என்று கூறினார் நடிகை ப்ரியா பவானிசங்கர். ஸ்ரீரெட்டி குறித்து கேட்டபோது ப்ரியாவின் குமுறல் இது.
சின்னத்திரையில் இருந்தார். செய்தி வாசித்தார். சீரியலுக்கு மாறினார். ரசிகர்களை சிரிக்க வைத்தார், அழ வைத்தார்.. தன் பின்னால் வர வைத்தார்.. ஸ்டார் ஆனார். பிறகென்ன வெள்ளித்திரைதானே.. மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் என ஓட ஆரம்பித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

சென்னை திருவொற்றியூரில் ஒரு அழகு நிலையம் ஒன்றை திறந்து வைக்க சென்று இருந்தபோது அங்கு செய்தியாளர்களை சந்தித்தார் ப்ரியா. அவர்களிடையே பேசுகையில், தற்போது இருக்கும் நடிகைகள் எல்லா தவறையும் செய்து விட்டு, அதை வெளிப்படையாக வெளியில் சொல்வதை கவுரவமாக நினைக்கின்றனர். அது மிகவும் தவறு.
சொல்லப்போனால் எல்லா துறைகளிலும் பாலியல் வன்கொடுமை இருக்கத்தான் செய்கிறது, அதேபோல தான் சினிமா துறையிலும் இருக்கிறது, அதை நான் மறுக்கவில்லை, இருந்தாலும் தான் செய்த தவறுக்கு எல்லோரையும் குறை கூறுவது ஒரு தவறான செயல். முடிந்த வரை குடும்ப படங்களில் நடித்துவிட்டு செல்வதே நல்லது. தவறான செயல்களில் ஈடுபடுவதை நாமே தவிர்க்க முடியும் இல்லையென்றால் இந்த துறையில் இருந்து வெளியே செல்லவும் முடியும்.
அவ்வாறு செய்தாலே போதுமே அதை விட்டுவிட்டு தன் பெயரை தானே கெடுத்து கொள்வதுபோன்ற செயலை ஸ்ரீ ரெட்டி போன்ற நடிகைகள் தவிர்த்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











