»   »  டிவியை உலுக்கும் நமீதா!

டிவியை உலுக்கும் நமீதா!

Subscribe to Oneindia Tamil

பெரிய திரை மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களை எகிற வைத்துக் கொண்டிருக்கும் நமீதா, தனது தாராள மனசுடன், டிவி பெட்டி மூலம் வீடுகளுக்குள் புகுந்து புயலைக் கிளப்பியுள்ளார்.

Click here for more images
பெரிய திரையை விட்டு இன்னும் நமீதா விலகாத நிலையில், அந்தத் தாக்கத்தின் பாதிப்பே இன்னும் ரசிகர்களின் மனதிலிருந்து நீங்காத நிலையில், டக்கென சின்னத் திரைக்கு வந்துள்ளார் நமீதா.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட என்ற டான்ஸ் கேம் ஷோவில் ஜூரியாக இணைந்துள்ளார் நமீதா. இதுவரை ஜூரியாக இருந்த சிம்ரன் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் தாராள மனசு நமீதாவை சேர்த்துள்ளார். இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் டான்ஸ் மாஸ்டர் கலா.

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் பாணி கேம் ஷோ இது. இதுதான் நமீதாவின் முதல் டிவி நிகழ்ச்சி. முதல் நிகழ்ச்சியிலேயே கலக்கலான கிளாமர் உடையில் வந்து டிவி ரசிக்களை வியர்க்க வைத்து விட்டார் நமீதா.

கலாவுடன் இணைந்து அவரது தங்கை பிருந்தாவும் ஜூரியாக செயல்படுகிறார். நமீதாவைப் பற்றி நாடே நனகு அறியும் என்பதால், அவரைக் காண டிவி பெட்டிகள் முன்பு கூட்டம் அலை மோத ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக நமீதாவுக்கு பெரும் சம்பளம் தரப்பட்டுள்ளதாம். இதுகுறித்து நமீதா கூறுகையில், இதுவரை இரண்டு எபிசோடுகளை ஷூட் செய்துள்ளனர். இது எனக்குப் புது அனுபவம். இந்த ரியாலிட்டி ஷோவில் எனது ஜூரி அந்தஸ்தை வெகுவாக அனுபவித்தேன்.

போட்டியாளர்கள் ஆடுவதைப் பார்த்து எனக்கே மூடு வந்து ஆட வேண்டும் போலத் தோன்றும் (பார்வையாளர்களுக்கு வேறு மாதிரியாக தோன்றுகிறதாம்)

போட்டியாளர்கள் அனைவருமே நல்ல திறமைசாலிகளாக உள்ளனர். நன்றாக டான்ஸ் ஆடுகின்றனர். அவர்கள் ஆடுவதைப்  பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது என்றார் நமீதா.

Read more about: namitha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil