ஷாம், கோபிகா, மீனா

By Staff

தமிழிலும், கன்னடத்திலும் நடித்து வரும் ஷாம் முதல் முறையாக தெலுங்குக்கும், மலையாளத்துக்கும் போயுள்ளார். மலையாளத்தில் ஷாமுக்கு ஜோடியாக மீனாவும், கோபிகாவும் தூள் கிளப்பியுள்ளார்களாம்.

பெங்களூர் பச்சைத் தமிழன் ஷாம், அங்கிருந்து கோலிவுட்டுக்கு வந்தார். குஷி படத்தில் விஜய்யின் நண்பனாக குட்டி ரோலில், ஒரே காட்சியில் வந்து போன ஷாம், அடுத்து ஹீரோவானார்.

அடுத்தடுத்து சில படங்களில் நடித்த ஷாம், இயற்கை மூலம் நடிப்பில் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வெற்றிகள் கைகூடவில்லை. இருந்தாலும் தனது தவறுகளை சரி செய்து கொண்டு சிறந்த நடிப்பைக் கொடுத்தபடிதான் இருக்கிறார்.

தமிழில் தற்போது இன்பா, தூண்டில் என இரு படங்களில் நடித்து வருகிறார் ஷாம். தமிழில் நடித்து வரும் ஷாம் அப்படியே கன்னடத்திலும் தலை காட்டினார். இப்போது தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடிக்கவுள்ளார் ஷாம்.

மலையாளத்தில் ஷாம் நடிக்கவுள்ள முதல் படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகளாம். ஒருவர் சீனியர் மீனா, இன்னொருவர் சின்னப் பெண் கோபிகா. இந்தப் படம் எனது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தைக் கொண்டு வரும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் ஷாம்.

அடுத்து தெலுங்கில் ஒரு படம் பண்ணுகிறார் ஷாம். அந்த ஊர்ப் பொண்ணு ஹீரோயினாக நடிக்கிறாராம். நம்ம ஊர் விஜி இயக்குகிறார். விஜி யாருன்னு தெரியும்ல, மொழி படத்தை இயக்கியவர்தான். பிரகாஷ் ராஜ் குழுமத்தைச் சேர்ந்தவர்.

திராவிட மொழிகளில் திருப்திகரமாக கலக்கிக் கொண்டிருக்கிறீர்களே, இந்தி ஆசை இல்லையை என்று கேட்டால், இருக்கிறது, ஆனால் தெரிந்த கம்பெனியாக இருந்தால் தேவலை, அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் ஷாம்.

ஆல் தி பெஸ்ட் ஷாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X