பெரிய கம்பெனி, பெரிய ஹீரோ படத்தில் நடிக்கும் இலியானா?

By Siva

மும்பை: பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்ட இலியானா ஃபேன் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டோலிவுட்டில் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கி கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார் நடிகை இலியானா. திடீர் என்று ஒரு நாள் நான் பாலிவுட்டில் செட்டிலாகப் போகிறேன் என்று மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார்.

அவர் நடிப்பில் வெளியான முதல் இந்தி படமான பர்ஃபியை பார்த்து அமிதாப் பச்சனே இலியானாவை பாராட்டினார்.

மெய்ன் தேரா ஹோ

மெய்ன் தேரா ஹோ

பர்ஃபியை அடுத்து படா போஸ்டர் நிக்லா ஹீரோ படத்திலும், மெய்ன் தேரா ஹோ படத்திலும் நடித்தார் இலியானா.

யஷ் ராஜ் பிலிம்ஸ்

யஷ் ராஜ் பிலிம்ஸ்

பாலிவுட்டில் நடிக்கும் அனைவருக்கும் யஷ் ராஜ் பிலிம்ஸ் பேனரில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை அனைவருக்கும் நிறைவேறிவிடாது.

இலியானா

இலியானா

இந்தியில் வளர்ந்து வரும் நடிகையான இலியானாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவர் யஷ் ராஜ் பிலிம்ஸ் ஷாருக்கானை வைத்து எடுக்கும் ஃபேன் படத்தில் நடிக்க உள்ளாராம்.

பல நடிகைகள்

பல நடிகைகள்

ஃபேன் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் இறுதியில் தேர்வாகியிருப்பது இலியானா என்று கூறப்படுகிறது.

அக்டோபர்

அக்டோபர்

மனீஷ் சர்மா இயக்கும் ஃபேன் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்குகிறது. தீபிகா படுகோனே புதுமுகமாக அறிமுகமானது ஷாருக்கான் படத்தில் தான். அதன் பிறகு அவர் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேப்பி நியூ இயர்

ஹேப்பி நியூ இயர்

ஷாருக்கான் தீபாவளிக்கு ரிலீஸாகும் தனது ஹேப்பி நியூ இயர் பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X