Priyamani: பவ்யமா நடிச்ச முத்தழகா இது? பிரியாமணியை ரசித்துப்பார்க்கும் பேன்ஸ்!
சென்னை: 39 வயதிலும் சும்மா கும்முனு இருக்கும் பிரியா மணியைப் ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி.

அதனைத்தொடர்ந்து இது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
பருத்தி வீரன்: நடிகை பிரியா மணி அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும், இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் பிரியாமணியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்து பாராட்டை பெற்றார். நடிகை பிரியா மணியின் சிறப்பான நடிப்பை பாராட்டி அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

அடுத்தடுத்த படங்களில்: இதைத்தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வந்த இவர். முஸ்தபா என்பவரை திருமணம் செய்துகொண்ட பிரியாமணி, திருமணத்துக்கு பின் சில நாட்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து அமேசான் பிரைமில் வெளியான ஃபேமிலி 1 ,ஃபேமிலி 2 ஆகிய இரண்டு சீரிஸூகளிலும் கொஞ்சம் எடை கூடி காணப்பட்டார்.
ஜவான் படத்தில்: தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மொழியில் கடந்த 7ந் தேதி வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து வருகிது. ஜவான் படத்திற்காக நடிகை பிரியாமணி உடல் எடையை குறைத்து சும்மா சிக்குனு இருக்கிறார்.

முத்தழகா இது: இணையத்தில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் நடிகை பிரியாமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான பேண்ட் ஷர்ட் அணிந்து கொண்டு செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பருத்திவீரன் படத்தில் பாவாடை தாவணியில் பவ்யமா நடிச்ச முத்தழகா இது என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











