Shakeela - விஜய்யுடன் காம்பினேஷன் காட்சிகள் இருந்தால் நோ.. கண்டிஷன் போட்டாரா ஷகீலா?

சென்னை: நடிகை ஷகீலா மலையாள திரையுலகில் ரொம்பவே ஃபேமஸாக இருந்தவர். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, சில யூட்யூப் சேனல்களுக்காக பேட்டி எடுப்பது என பிஸியாக இருக்கிறார். இந்தச் சூழலில் விஜய்யுடன் காம்பினேஷன் காட்சிகள் இருந்தால் நடிக்கமாட்டேன் என்று சொல்லி ஒரு படத்தில் அவர் கமிட்டானதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

Shakeela has said that she will not act if there are combination scenes with Vijay

பயந்த ஹீரோக்கள்: ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாள்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.

குக் வித் கோமாளி: ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற அடையாளம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த மனிதியை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும் ஷீத்தல் என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஒதுங்கிய ஷகீலா: ஷகீலா தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் தோல்விகளை சந்தித்தவர். அதனை அவரே சொல்லியும் இருக்கிறார். சமீபத்தில்கூட ஒரு தகவலின்படி அவர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் மீது சிறு வயதில் காதலில் இருந்ததாகவும் பேச்சு ஒன்று ஓடியது. காலங்கள் செல்ல செல்ல ஷகீலாவிற்கான பட வாய்ப்புகள் குறைந்தன. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துவருகிறார். சொந்தமாக யூட்யூப் சேனலையும் நடத்திவருகிறார்.

கண்டிஷன் போட்ட ஷகீலா: இந்நிலையில் நடிகை ஷகீலா குறித்து புதிய தகவல் ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது. அதாவது அழகிய தமிழ் மகன் படத்தில் நடிக்க வைக்க அதன் இயக்குநர் ஷகீலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அப்போது விஜய்யுடன் காம்பினேஷன் காட்சிகள் இருந்தால் நான் நடிக்கமாட்டேன் என்று அவர் வைத்த கண்டிஷனுக்கு இயக்குநர் ஒத்துக்கொண்டாராம். அதற்கு காரணம் என்னவென்றால், ஷகீலாவும், விஜய்யும் தங்களது கரியரின் ஆரம்பத்தில் நன்றாகவே பழகினார்களாம். ஆனால் விஜய் வளர வளர பிறரிடம் நெருங்கி பழகுவதை குறைத்துக்கொண்டாராம். எனவேதான் ஷகீலா அதனை யோசித்து அந்த மாதிரியான கண்டிஷன் வைத்தார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X