நான் நடித்த அந்தப் படம்.. தம்பியே பார்த்துவிட்டான்.. என்ன நடந்தது தெரியுமா?.. ஷகீலா சொன்ன ஷாக் தகவல்

சென்னை: நடிகை ஷகீலா மலையாள திரையுலகில் ரொம்பவே ஃபேமஸாக இருந்தவர். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, சில யூட்யூப் சேனல்களுக்காக பேட்டி எடுப்பது என பிஸியாக இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். அதை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

Shakeela Reveals Shocking Incident in her Life Here are the details

பயந்த ஹீரோக்கள்: ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாள்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.

குக் வித் கோமாளி: ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற அடையாளம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த மனிதியை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும் ஷீத்தல் என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஒதுங்கிய ஷகீலா: ஷகீலா தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் தோல்விகளை சந்தித்தவர். அதனை அவரே சொல்லியும் இருக்கிறார். சமீபத்தில்கூட ஒரு தகவலின்படி அவர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் மீது சிறு வயதில் காதலில் இருந்ததாகவும் பேச்சு ஒன்று ஓடியது. காலங்கள் செல்ல செல்ல ஷகீலாவிற்கான பட வாய்ப்புகள் குறைந்தன. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துவருகிறார். சொந்தமாக யூட்யூப் சேனலையும் நடத்திவருகிறார்.

ஷகீலா பேட்டி: இந்நிலையில் ஷகீலா சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், எனது வாழ்க்கையில் இரண்டு மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தன. மலையாளல்த்தில் நான் கவர்ச்சி படங்கள் செய்துகொண்டிருந்த நேரம் என்னுடைய தம்பி அவனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சென்றிருந்தான். அங்கு அவர்கள் ஆபாச பட சிடி ஒன்றை வாங்கியிருக்கிறார்கள். படத்தை பார்த்தால் அந்தப் படத்தில் நான் நடித்திருக்கிறேன்.

மூன்று நாட்கள் காய்ச்சல்: அதனைப் பார்த்து அழுதுகொண்டே பைக்கிலேயே வந்துவிட்டான். மூன்று நாட்களாக அவனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. என்ன ஆச்சு என்று நான் கேட்டேன். அதற்கு அவர், நீ இந்த மாதிரி படம் பண்ணியிருக்கிறே என்று சொன்னான்; அதற்கு நானோ ஆமாம் இந்த மாதிரியான படம்தான் செய்கிறேன் என்று அழுத்தமாக மீண்டும் சொன்னேன். இதுதான் எனக்கு தெரிந்த வழி என்றும் அவனிடம் சொன்னேன். நான் ஆபாச படம் நடிக்கவில்லை கிளாமராக நடிக்கிறேன் என்று சொல்லி புரியவைத்தேன்.

உணர்வை புரிந்துகொண்டேன்: இருந்தாலும் எனது தம்பியின் உணர்வை அன்று நான் புரிந்துகொண்டேன். அதனால்தான் ஆபாச உடை அணிந்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு திருமணம் நடந்து நாளை குழந்தைகள் வந்து உங்களுடைய இந்த வீடியோக்களை பார்த்து என்னவென்று கேட்டால் என்ன செய்வீர்கள். எல்லாம் செய்துவிட்டு வந்து ஷகீலா இப்படி பேசலாமா என்று நினைக்கலாம். நான் எனது குடும்பத்தின் சூழலுக்காகத்தான் அப்படி போனேன். அந்தப் பெயரை மாற்றுவதற்கு நான் படாத பாடு பட்டுவிட்டேன்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X