Shakeela - 2 நாட்களுக்கு நான் தேவை.. மோசமான அனுபவம்.. ஷகீலா பகிர்ந்த சீக்ரெட்.. ரொம்ப கஷ்டம்

சென்னை: நடிகை ஷகீலா 18+ நடிகையாக வலம் வந்தவர். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல் மலையாள திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருந்தார். இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்காக பேட்டி எடுப்பது, பேட்டி கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார். இந்த சூழலில் தனது திரை வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

மலையாள திரையுலகில் 18+ நடிகையாக வலம் வந்தார் ஷகீலா. அவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. இளைஞர்கள் மத்தியில் ஷகீலாவின் படங்களுக்கு பெரிய கிரேஸ் இருந்தது. இதனால் மலையாளத்தில் டாப் நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் ஆகியோர்கூட ஷகீலாவை கண்டு உள்ளுக்குள் அச்சம் கொண்டிருந்ததாக பல காலமாகவே ஒரு தகவல் உண்டு. ஷகீலாகூட ஒரு பேட்டியில் பேசுகையில், அவர்கள் எனது படத்தை வெளியிட விடாமல் இருக்க ஏகப்பட்ட சதிகளை செய்தார்கள் என்று ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Shakeela Shares her Worst Experience in Cinema Industry

ஷகீலா பேட்டி: தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதும், பேட்டி எடுப்பதுமாக இருக்கிறார். அந்தவகையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "அவர்களுக்கு நான் இரண்டு நாட்களுக்கு தேவை. அவர்கள் சொல்லிய கதையில் கண்டிப்பாக ஒரு படுக்கையறை காட்சி இருக்கும், குளியல் காட்சி இருக்கும். அந்த இரண்டு காட்சிகளைத்தான் எனது நடிப்பில் காட்டுவார்கள்.

18+ படங்கள்தான்: என்னை அழைத்து யாரும் கமர்ஷியல் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் என்னை 18 + படத்தில்தான் நடிக்க வைத்தார்கள். 18 வயதுக்கு மேல் இருந்தால் வந்து பாருங்கள் அதற்கு மேல் எதுவும் இல்லை. 18க்கு மேல் இருந்தாலும் பெண்களும் வந்து பார்க்கலாம். ஆனால் அவர்கள் வராதது என்னுடைய தவறு இல்லை. என் திரைப்படங்களை பார்ப்பதற்கு ஆண்கள் அதிக அளவு வந்தது என்னுடைய தவறு இல்லை.

சொல்லிக்கொடுக்காதீர்கள்: எப்படி உடை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடாது. மாறாக ஒரு பெண்ணை சகோதரியாக நடத்த வேண்டும் என்று ஆண்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண்களுக்கிடம் சென்று நீங்கள் இதை அணியாதீர்கள் அதை அணியாதீர்கள் என்று சொல்வது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

மக்களுக்கு சொல்ல வேண்டும்: நான் என்ன செய்தேன், எனக்கு என்ன நடந்தது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் அவர்கள் சாதாரணமாக கடந்து செல்லக்கூடாது. ஒரு குழந்தையை வளர்க்க நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருந்தது. நான் எனக்கு நடந்ததை சொல்கிறேன். காஸ்டிங் கவுச் அனுபவங்களை நான் சந்தித்தேன். அது எனக்கு மோசமான அனுபவம்தான். ஷூட்டிங்கில் தங்களது குழந்தைகளை மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிப்பார்கள்.

எனக்கு அப்படி இல்லை: ஆனால் நான் படங்கள் பண்ணும்போது எனது பெற்றோர்கள் அப்படி இல்லை. அவர்கள் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்று எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அதை நான் அனைத்து இடங்களிலுமே சொல்ல முயல்கிறேன். சினிமா துறையில் நிறைய ஆபத்து இருக்கின்றன. ஆனால் உங்களுக்கு நல்ல பிஆர்ஓ மற்றும் பெற்றோர்கள் இருந்தால் இது ஒரு அருமையான துறை. நான் மக்களை எப்போதும் திருத்துவதற்கு முயற்சிக்கவில்லை. எனக்கு நடந்திருக்கிறது. அதை சொல்கிறேன்" என்றார்.

ஷகீலா தமிழில் ஜெயம், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர். அந்த நிகழ்ச்சி குறித்தும் ஏகப்பட்ட அதிரடியான கருத்துக்களை தைரியமாக பொதுவெளியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X