குடும்பத்தாரை பழிவாங்கத் துடிக்கும் ஷகீலா!
பெங்களூர்: அடுத்த பிறவியிலும் இதே குடும்பத்தில் பிறந்து அவர்களை பழிவாங்க வேண்டும் என்று கவர்ச்சி நடிகை ஷகீலா தெரிவித்துள்ளாராம்.
மலையாளம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்தவர் கவர்ச்சி நடிகை ஷகீலா. ஒரு காலத்தில் மலையாளத்தில் ஷகீலா படங்கள் ரிலீஸாகிறது என்றால் அந்த நேரத்தில் தங்கள் படங்களை வெளியிட பெரிய நடிகர்களே தயங்கினர்.
தற்போது கிடைக்கும் வேடங்களில் நடித்து வரும் அவர் கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

பிக் பாஸ் 2
கன்னட நடிகர் சுதீப் பிக் பாஸ் 2 என்ற ரியாலிட்டி ஷோவை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் ஷகீலா கலந்து கொண்டுள்ளார்.

ஷகீலா
மீண்டும் பிறக்க முடிந்தால் நான் மறுபடியும் ஷகீலாவாகவே பிறக்க விரும்புகிறேன். அதுவும் மீண்டும் அதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன் என்று ஷகீலா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

பழிவாங்க
ஏன் அதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் குடும்பத்தாரால் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். அவர்கள் என்னை படுத்தியபாட்டுக்கு அவர்களை பழிவாங்க போகிறேன் என்றார் ஷகீலா.

குடும்பத்தார்
இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது அதை பார்த்து ஷகீலாவின் குடும்பத்தார் என்ன செய்யப் போகிறார்களோ?


Click it and Unblock the Notifications











