சினிமா இயக்குநரான ஷகிலா.. முதல் படம் தெலுங்கில்!
பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா சினிமா இயக்குநராக மாறியுள்ளார்.
தமிழில் காமெடி நடிகையாகவும், மலையாளத்தில் பெரும் கவர்ச்சி குண்டாகவும் வஸம் வந்தவர் ஷகிலா.
பின்னர் மலையாளத்திலிருந்து ஒதுங்கி, தமிழில் மட்டும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் புதிய சினிமா ஒன்றை இயக்குகிறார் ஷகிலா.
இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளாராம். இந்தப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, இந்தி என்று இரு மொழிகளில் தயாராகி வருகிறது.
முற்றிலும் புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார் ஷகிலா. தொழில்நுட்பக் கலைஞர்களும் புதியவர்களே.

படத்தில் நாயகன், நாயகி மட்டுமல்ல, தொழில் நுட்பக் கலைஞர்களும் புதியவர்கள்தான். ஷகிலாவின் சொந்த ஊர்க்காரர்கள்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்களாம்.
இந்தப் படத்தில் கிளாமர் கொஞ்சமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறாராம் ஷகிலா.
மேலும் விரைவில் தன் சொந்த வாழ்க்கைக் கதையை 5 மொழிகளில் படமாக எடுக்கிறாராம் ஷகிலா.


Click it and Unblock the Notifications












