Just In
- 3 hrs ago
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
ஜெய்பூரில் படமாகும் பொன்னியின் செல்வன்...மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா
- 4 hrs ago
உதயநிதி ஸ்டாலின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. வைரலாகும் தகவல்!
- 4 hrs ago
நான் பல்லாவரம் பொண்ணு.. என்னைப் பத்தி அதிகமா இதுக்குத் தான் தெரியும்.. வைரலாகும் சமந்தாவின் வீடியோ!
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Automobiles
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உள்ளது உள்ளபடி.... சுயசரிதை எழுதுகிறார் ஷகிலா.. கலக்கத்தில் பிரபலங்கள்!
சென்னை: கவர்ச்சி குண்டு ஷகிலா தன் சொந்த வாழ்க்கைக் கதையை ஒளிவு மறைவின்றி முழுமையாக எழுதப் போகிறாராம்.
ஷகிலா என்றால் இன்றும் இணையதளங்கள் அதிருமளவுக்கு படங்களும் வீடியோக்களும் கொட்டிக் கிடக்கின்றன.
தொன்னூறுகளின் இறுதியில் தொடங்கி சில ஆண்டுகளுக்கு தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் கலக்கியவை ஷகிலாவின் பிட்டு படங்கள்.

ஜோதியை வாழவைத்த ஜோதி!
எத்தனையோ புறநகர்ப் பகுதி அரங்குகளை மூடுவிழா காணாமல் காப்பாற்றி வந்ததும் இந்த 'அஞ்சரைக்குள்ள வண்டி'தான். சென்னையின் முக்கிய ஒற்றைத் திரை தியேட்டரான ஜோதி ரொம்ப நாள் ஷகிலா தயவில்தான் ஓடிக் கொண்டிருந்தது.

மலையாளத் திரையுலகை அதிர வைத்தவர்
இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் ஷகிலா கால்ஷீட்டுக்காக க்யூவில் நின்றனர் மலையாளத் திரையுலகினர். கேரளாவில் அன்றைக்கே ஒரே ஊரில் இரண்டு மூன்று அரங்குகளில் ஷகிலா படம் ரிலீஸாகும் அளவுக்கு அமோக ஆதரவு அம்மணிக்கு.

மிரட்டல்
இவருக்கு பெருகிய ஆதரவு மற்றும் குவியும் படங்களைப் பார்த்து பயந்து போயினர் பெரிய ஸ்டார்களும். குறிப்பாக ஷகிலா படம் வெளியாகும் நேரத்தில் தங்கள் படங்களை வெளியிடத் தயங்கும் அளவுக்குப் போனது நிலைமை. மம்முட்டி மற்றும் மோகன்லாலின் நான்கு படங்கள், ஷகிலா பட ரிலீஸ்களால் தள்ளிப் போயின.

பேக்கப்
இதற்குமேல் விட்டுவைத்தால் நிலைமை மோசமாகிவிடும் என யோசித்த மலையாளத் திரையுலகினர், ஷகிலா கேரளாவிலேயே வசிக்கக்கூடாது என மிரட்டி அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். அதே நேரம் ஷகிலா நடித்த பிட்டுப் படங்கள் காரணமாக அவர் மீது தமிழகத்தில் சில வழக்குகளும் தொடரப்பட்டன.

காமெடிக்குத் தாவினார்
இந்த நேரத்தில்தான் கவர்ச்சி ரூட்டை விட்டு காமெடி ரூட்டைப் பிடித்தார் ஷகிலா. முதல்நிலை நடிகர்களான விஜய், விக்ரம், ஜெயம் ரவி போன்றவர்களின் படங்களில் காமெடி வேடங்களில் வர ஆரம்பித்தார்.

திருமணம் இல்லை
ஆவடி தேமுதிகவைச் சேர்ந்த ஒருவர் ஷகிலாவைக் காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஷகிலாவும் கூறினார். ஆனால் திருமணம் நடக்கவில்லை.

சுயசரிதை
இந்த நிலையில் ஷகிலா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதப் போவதாக அறிவித்தார். தன் வாழ்க்கையில் நடந்ததை உள்ளது உள்ளபடி எழுதப் போகிறாராம். இதனால் மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரிதாக விழா நடத்தி இந்த சுயசரிதை புத்தகத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் ஷகிலா.