»   »  சாக்ஷியின் பட்டாளத்தான்

சாக்ஷியின் பட்டாளத்தான்

Subscribe to Oneindia Tamil

"பட்டாளத்தான் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார் சாக்ஷி.

தமிழில் சில நடிகைகள் வருவதும் போவதும் தெரியாது. திடீரென பக்கத்து மாநிலங்களிலிருந்தோ அல்லது இந்தியிலிருந்தோபடையெடுத்து வருவார்கள். ஒன்றிரண்டு படங்களில் நடிப்பார்கள். பிறகு காணாமல் போய் விடுவார்கள்.

இப்படி ஒன்றிரண்டு படங்களில் நடித்து காணாமல் போன நடிகைகளில் ஒருவர் தான் சாக்ஷி. இவர் பிரபு, அர்ஜூன், சரத்குமார் எனமுன்னணி நடிகர்களுடன் அவ்வப்போது நடித்த போதிலும் தமிழில் ஒரு நிலையான இடத்தை இதுவரை தக்க வைக்க முடியவில்லை.

திடீரென வருவார், ஒரு படத்தில் நடிப்பார். பிறகு காணாமல் போய் விடுவார். அடுத்து ஒரு சிறிய கேப்பிற்கு பிறகு மீண்டும் வருவார்.அப்படித்தான் சரத்குமாருடன் மானஸ்தனில் நடித்த பிறகு இதோ இப்போது டப்பிங் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

கன்னடத்தில் 100 நாட்கள் ஓடிய ஷைனிகா என்ற படம் பட்டாளத்தான் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்தப்படத்தில் யோகேஸ்வருக்கு ஜோடியாக சாக்ஷி நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ராணுவ வீரனை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. விடுமுறையில் ஊருக்கு திரும்பும் ராணுவ வீரன் தனது முறைப் பெண்ணைதிருமணம் செய்கிறான். திருமணம் முடிந்த கையோடு பணிக்குத் திரும்பும் அவன் போரில் இறந்து விட்டதாக தகவல் வருகிறது.

அதிர்ச்சியில் அவனது குடும்பமே உறைந்து போகிறது. ஆனால் திடீர் திருப்பமாக அவன் உருக்குலைந்த முகத்துடன் ஊருக்கு திரும்புகிறான்.அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் ஹைலைட்.

ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீவித்யா,சோனாலி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். சினேகன், யுகபாரதி,கலைக்குமார், மகாலெட்சுமி என ஒரு பட்டாளமே பாடல்களை எழுதுகிறது.

இது ஒரு புறமிருக்க, சாக்ஷி கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்த பணத்தில் ஆந்திராவில் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் மஞ்சு ரேவுலா என்றகிராமத்தில் நிலம் வாங்கினார். இப்பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரிடமிருந்து 9 வருடங்களுக்கு முன் இந்த நிலத்தை இவர்வாங்கினார். தற்போது இதன் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகம்.

தனது நிலத்தை சுற்றி வேலி அமைத்து போர்டும் வைத்திருந்தார். இந் நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ராஜூ நாயக் என்பவர் சாக்ஷியின்நிலத்தில் இருந்த வேலியை உடைத்து விட்டு காம்பவுண்டு சுவர் கட்டினார்.

இது குறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்த சாக்ஷி, ஐதராபாத் போலீஸ் கமிஷனரிடம் தனது நிலத்தை மீட்டுத்தரும்படி புகார் செய்தார். இதைதொடர்ந்து ராஜூ நாயக்கிடம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர், நிலம் தனக்கு சொந்தமானது. கோர்ட்டில்வேண்டுமானால் அவர் வழக்கு தொடரட்டும், பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

போலீஸாரால் நடவடிக்கை எடுக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் சாக்ஷி புகார் செய்தார்.அவர் இது தொடர்பாக கூறுகையில், நடிகை சாக்ஷியின் நிலம் அபகரிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது குறித்து நடிகை சாக்ஷி கூறுகையில், எனது நிலத்தை அபகரித்துள்ள ராஜூ நாயக் அரசியல் செல்வாக்கு உள்ள ரெளடி. அவர் என்னைகொலை செய்வேன் என்று மிரட்டுகிறார். முதல்வரின் மகன் ஜெகன், கவர்னரின் செயலாளர் அன்வர் ஆகியோர் தனக்கு மிகவும்நெருங்கியவர்கள் என்பதால் தன்னை யாரும் நெருங்க முடியாது என்கிறார்.

போலீஸார் இதை வாய் மூடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய நிலத்தை நான் விட்டுக் கொடுக்க ரூ.25 லட்சம் தருவதாகஆட்களை அனுப்பி பேரம் பேசுகிறார். போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று கொட்டித் தீர்க்கிறார்.

சாக்ஷியின் இந்த நில விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more about: sakshi in pattalathan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil