Shalini Ajith: ஆசை கணவரின் விடாமுயற்சி.. திரையரங்கில் சென்று பார்த்த ஷாலினி.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள நிலையில், இந்தப் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள நிலையில் ரசிகர்கள் திரையரங்குகளில் அதிரடி கிளப்பி வருகின்றனர்.
இன்றைய தினம் படத்தின் ரிலீசையொட்டி அதிகாலை முதலே ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நடிகை திரிஷா, ரெஜினா, ஆரவ், அர்ஜுன் தாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டவர்கள் திரையரங்குகளில் ரசிகர்களோடு இணைந்து படத்தை பார்த்து மகிழ்ந்தனர். இதனிடையே நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினியும் திரையரங்கில் சென்று படத்தை பார்த்துள்ளார்.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இன்றைய தினம் திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கப்பட்ட நிலையில் அசர்பைஜானில் தொடர்ந்து நடத்தப்பட்டது. அங்கு நிலவிய காலச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடத்தப்படாமல் முடங்கியது. இதையடுத்து சில மாத இடைவெளிக்கு பிறகு படத்தின் சூட்டிங் மீண்டும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ரிலீசை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகியுள்ள அஜித்தின் இந்தப் படம் பண்டிகை கொண்டாட்டமாக மாறியுள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்: படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்துடன் என்ஜாய் செய்து வரும் நிலையில், படக்குழுவினரும் திரையரங்குகளில் சென்று படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்து வருகின்றனர். அந்த வகையில் படத்தின் நாயகி திரிஷா, ரெஜினி, ஆரவ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டவர்கள் சென்னையின் முக்கிய திரையரங்குகளில் படத்தை பார்த்துள்ளனர். இதனிடையே நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமாரும் தன்னுடைய தம்பி ரிஷியுடன் சேர்ந்து சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் சென்று படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார்.
திரையரங்கில் சென்று படம்பார்த்த ஷாலினி: வழக்கமாக அஜித் படங்களை மட்டுமில்லாமல் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களை தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று பார்ப்பவர் ஷாலினி அஜித். அந்த வகையில் தன்னுடைய காதல் கணவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தை அவர் ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார். முன்னதாக ரசிகர்களின் அன்புமழையிலும் அவர் நனைந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் அவர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதையடுத்து தன்னுடைய தம்பி ரிஷியுடன் இணைந்து அவர் படத்தை பார்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











