மாலத்தீவில் ஷாலினிப் பாண்டே.. நீச்சல் உடையில் பீச்சை ஹாட்டாக்கிய நடிகை.. ரசிகர்கள் உற்சாகம்!
மாலத்தீவு : தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை ஷாலினி பாண்டே.
இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஷாலினி பாண்டே.

நடிகை ஷாலினி பாண்டே
நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்து வெளியான அர்ஜுன் ரெட்டி இவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழிலும் இந்தியிலும் இவருக்கு வாய்ப்புகள் அமைந்தன.

தமிழில் அடுத்தடுத்த படங்கள்
இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களையும் அர்ஜுன் ரெட்டி படம் ஷாலினி பாண்டேவிற்கு பெற்றுத் தந்தது. தமிழில் கொரில்லா, 100 % காதல், நிசப்தம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். ஆனால் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது இவர்வசம் ஒரு தமிழ் படம்கூட இல்லை.

தமிழில் 3 படங்கள்
தமிழில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக 100% காதல் படமே இவருக்கு அறிமுக படமாக அமைந்தது. தொடர்ந்து ஜீவாவுடன் கொரில்லா படத்தில் நடித்திருந்தார். மாதவன் வில்லன் கேரக்டரில் நடித்து தமிழ், தெலுங்கு என இருமொழிப் படமாக வெளியான நிசப்தம் படத்திலும் ஷாலினி பாண்டே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

பாலிவுட்டிலும் ஷாலினி பாண்டே
பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துவரும் ஷாலினி பாண்டே, தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். இதன்மூலம் பட வாய்ப்புகளை பெறும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மாலத்தீவில் விடுமுறை கொண்டாட்டம்
இந்நிலையில் தற்போது மாலத்தீவில் ஷாலினி பாண்டே தன்னுடைய விடுமுறையை கழித்து வருகிறார். இந்த சுற்றுலாவின்போது கடற்கரையில் கடலுக்கு நடுவில் என பிகினியில் புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. வைரலும் ஆகி வருகின்றன.

கவர்ச்சிக் காடாக மாறிய ஷாலினி பாண்டே
இந்தப் படங்களின் மூலம் கவர்ச்சிக் காடாக மாறியுள்ள ஷாலினி பாண்டே, தொடர்ந்து பல விதமான பிகினிக்களில் படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களின் பேக்கிரவுண்ட் மிகவும் அழகாக காணப்படுகின்றன. ரசிகர்களின் ஏராளமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











