குட்டி டிரெஸ்ஸில் குரங்கு போல தாவுறாரே அர்ஜுன் ரெட்டி ஹீரோயின்.. வீடியோவை பார்த்துட்டே இருக்கலாம்!
சென்னை: அர்ஜுன் ரெட்டி படத்தில் அறிமுகமான நடிகை ஷாலினி பாண்டேவுக்கு 30 வயதாகிறது. 2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல இப்பவும் ஸ்லீம் அண்ட் சிக்காக இருக்கிறார். இன்னைக்கு ஷாலினி பாண்டேவின் புதிய ஒர்க் அவுட் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கருப்பு நிற குட்டி ஜிம் உடையை அணிந்து கொண்டு ஓவர் கிளாமரில் அவர் செய்யும் ஒர்க்கவுட் வீடியோ இளைஞர்களை பார்த்த மாத்திரத்திலேயே லைக் செய்ய வைத்து வருகிறது.

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஷாலினி பாண்டேவுக்கு இன்னும் ஒரு தரமான வெற்றி படம் இல்லை என்பது சோகமான விஷயம் தான்.
முதல் படமே மிகப்பெரிய வெற்றி: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 10 கோடி ரூபாய் மதிப்பில் உருவான திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது. அந்த படத்தை இந்தியிலும் சந்திப் ரெட்டி வங்காவே இயக்கி 400 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்தார். அந்த படத்தையும் வெற்றிதான் அனிமல் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது.
ஷாலினி பாண்டே நடித்த படங்கள்: அர்ஜுன் ரெட்டி படத்துக்கு பிறகு மிகப்பெரிய முன்னணி நடிகையாக வலம் வருவார் ஷாலினி பாண்டே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர் தேர்வு செய்த படங்கள் எல்லாம் பெரிதாக ஓடவில்லை. அர்ஜுன் ரெட்டி படத்தை தொடர்ந்து ஹிந்தியில் மேரி நிம்மோ படத்தில் நடித்தார் அது ஓடவில்லை. மகாநதி படத்தில் சின்ன ரோலில் நடித்தார். என்டிஆர் படத்தில் சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 118, ஜி.வி. பிரகாஷின் 100% காதல், ஜீவாவின் கொரில்லா, அனுஷ்காவின் நிசப்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இந்தியில் உருவாகி வரும் மகாராஜா படத்தில் நடித்து வருகிறார்.
குரங்கு போல தாவி: 30 வயதானாலும் இன்னமும் 20 வயது இளம் பெண் போலவே தோற்றமளித்து வருகிறார். கருப்பு நிற உள்ளாடை மற்றும் குட்டி ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு ஜிம் உடையில் குனிந்து நிமிர்ந்து அவர் செய்யும் கவர்ச்சியான வொர்க்கவுட் வீடியோ தீயாக பரவி வருகிறது. மேலும், ஃபிட்னஸ் டிரெய்னர் தன்னுடைய கோச்சாகவும் நண்பராகவும் இருப்பதால், வொர்க்கவுட் செய்கிறோம், பேசுகிறோம், அரட்டை அடிக்கிறோம் என பதிவிட்டுள்ளார். குரங்கு போல அவர் வேகமாக தாவி தாவி உடற்பயிற்சி செய்வது எல்லாம் பார்த்தால் ரசிகர்களுக்கு வியர்த்துப் போய் விடும் அளவுக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications











