விஜய்யுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தது நரக வேதனை: அர்ஜுன் ரெட்டி ஹீரோயின்

By Siva

Recommended Video

விஜயுடன் நடித்த அந்த காட்சி மிகவும் நரக வேதனை- ஷாலினி பாண்டே- வீடியோ

சென்னை: அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தது நரக வேதனையாக இருந்தது என்று ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரை சேர்ந்தவர் ஷாலினி பாண்டே. என்ஜினியரிங் படித்து முடித்த பிறகு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நடிகையானார்.

அவர் நடித்த முதல் படமான அர்ஜுன் ரெட்டியே அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் சினிமா, குடும்பம் குறித்து அவர் கூறியதாவது,

எதிர்ப்பு

எதிர்ப்பு

சினிமாவில் நடிக்கக் கூடாது என்று அப்பா கூறினார். ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேருமாறு வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் எனக்கு படித்த படிப்புக்கு வேலை செய்வதை விட படங்களில் நடிக்கவே விருப்பமாக இருந்தது.

மும்பை

மும்பை

பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு மும்பைக்கு கிளம்பி வந்தேன். போ போ போய் தெருவில் பிச்சை எடுக்கப் போகிறாய் என்று என் தந்தை என்னிடம் கூறினார்.

ஆண்கள்

ஆண்கள்

மும்பையில் இரண்டு ஆண்கள் தங்கியிருந்த வீட்டில் நானும், ஒரு பெண்ணும் தங்கினோம். அந்த ஆண்கள் மிகவும் உதவியாக இருந்தார்கள். ஒரு நாளும் என்னை தவறான நோக்கத்தோடு பார்த்தது இல்லை.

அர்ஜுன் ரெட்டி

அர்ஜுன் ரெட்டி

அர்ஜுன் ரெட்டி படம் ஹிட்டானதும் என் குடும்பத்தார் என்னை ஏற்றுக் கொண்டனர். கல்லூரியில் படித்த போதும், சினிமாவுக்கு வந்த பிறகும் 2 முறை காதலில் தோல்வி அடைந்தேன்.

நரக வேதனை

நரக வேதனை

காதல் தோல்வியால் கஷ்டப்பட்டபோது தான் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தேன். விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது என் காதல் நினைவுக்கு வந்து நரக வேதனையாக இருந்தது. இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு நடித்தேன் என்கிறார் ஷாலினி பாண்டே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X