வெல்வெட் டிரஸ்ஸில் ஷாலினி பாண்டேவின் க்யூட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
சென்னை : தெலுங்கு சினிமாவில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே
தமிழில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான 100% காதல் படத்தில் நடித்து அறிமுகமானார்
தென்னிந்தியாவை தொடர்ந்து இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வரும் ஷாலினி பாண்டே இப்பொழுது வெல்வெட் உடையில் செம க்யூட்டாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

சிறப்பான நடிப்பை
இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகராக இப்போது புகழ்பெற்று இருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து முதல் முறையாக திரையில் தோன்றியவர் நடிகை ஷாலினி பாண்டே. முதல் திரைப்படம் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு எந்த அளவிற்கு ரசிகர்களால் பாராட்டப் பட்டதோ அதே அளவிற்கு நடிகை ஷாலினி பாண்டேவின் நேர்த்தியான நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

தமிழ் சினிமாவில் என்ட்ரி
அர்ஜுன் ரெட்டி கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாக தமிழில் உடனடியாக அறிமுகமானார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்த 100% காதல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஷாலினி பாண்டேவுக்கு அடுத்தடுத்த படங்கள் மளமளவென குவிந்தன. ஜீவாவுடன் இணைந்து கொரில்லா என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து இருப்பார்.

ரன்வீர் கபூர் ஹீரோவாக நடிக்கும் ஜயீஷ்பாய் ஜோர்தார்
மாதவன் முற்றிலும் வித்தியாசமான நெகட்டிவ் ரோலில் நடித்த நிசப்தம் திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்த ஷாலினி பாண்டேவுக்கு இப்போது இந்தி பட துறையிலும் இருந்து பல வாய்ப்புகள் குவிகிறது. அந்த வகையில் நடிகர் ரன்வீர் கபூர் ஹீரோவாக நடிக்கும் ஜயீஷ்பாய் ஜோர்தார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதைத்தொடர்ந்து மஹாராஜா என்ற மற்றுமொரு ஹிந்திப் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
Recommended Video

வெல்வெட் உடையில் செம க்யூட்டாக
தென்னிந்தியாவில் நடித்த சில படங்களிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட நடிகை ஷாலினி பாண்டே இப்போது இந்தி பட உலகிலும் கால் தடத்தை பதித்து அடுத்தடுத்த படங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டு வரும் சூழலில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெல்வெட் உடையில் செம க்யூட்டாக இருக்கும் ஷாலினி பாண்டேவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











