அந்தப் படம் மட்டும் வரட்டும்... வேற லெவல்ல இருப்பேன்... ஷாலினி பாண்டேவின் சர சர நம்பிக்கை
சென்னை: இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வெளியானால், நான் வேறு லெவலில் வெளிப்படுவேன் என்று நடிகை ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம், அர்ஜுன் ரெட்டி. இது தமிழ் உட்பட சில மொழிகளில் ரீமேக் ஆனது. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார், அவர் ஜோடியாக நடித்திருந்தவர், ஷாலினி பாண்டே.
இந்தப் படத்துக்குப் பிறகு, பிரபலமான அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். தமிழில், ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, 100% காதல், ஜீவா ஜோடியாக கொரில்லா படங்களில் நடித்தார். இதையடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் நிசப்தம் படத்தில் நடித்துள்ளார்.

ரன்வீர் சிங்
இப்போது, ஜயேஷ்பாய் ஜோர்தார் (Jayeshbhai Jordaar)என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை திவ்யங் தக்கார் இயக்குகிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் காமெடி படம் இது.

200 சதவிகிதம்
இதில் நடிப்பது பற்றி ஷாலினி பாண்டே கூறும்போது, 'ரன்வீர் சிறந்த நடிகர் என்பது தெரியும். அவர் 200 சதவிகிதம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். ஸ்கிரிப்ட் என்ன கேட்கிறது என்றாலும் அதைவிட நடிப்பில் இன்னும் நுணுக்கங்களைச் சேர்ப்பவர் அவர்.

மேதையாக இருக்கிறார்
அதில் அவர் மேதையாக இருக்கிறார். நடிகையாக அதைப் பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவருடன் நடிக்கும்போது நானும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று தோன்றும்.

நம்பிக்கை அதிகரிப்பு
அதனால் நானும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறேன். இதனால் நடிகையாக நம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. இந்தப் படம் வெளிவந்தால் நல்ல நடிகையாக, நான் வெளிப்படுவேன் என்று நம்புகிறேன் என்கிறார்.


Click it and Unblock the Notifications











