வீட்டில் அஜித் இப்படித்தான் இருப்பார்.. ஏகே பற்றி நாம் அறியாத பக்கங்களை சொன்ன ஷாலினி

சென்னை: அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித்தும், ஷாலினியும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அதனையடுத்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக அவர்கள் வலம் வருகிறார்கள். இந்நிலையில் அஜித் பற்றி நமக்கு தெரியாத பக்கங்களை சமீபத்தில் கலந்துகொண்ட விருது வழங்கும் விழாவில் ஷாலினி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. தங்களது காதலை வீட்டில் சொல்லிய பிறகு வீட்டு சம்மதம் கிடைத்ததால் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு ஒரு மகளையும், மகனையும் பெற்றார்கள். திருமணம் செய்துகொண்ட கையோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஷாலினி. மேலும் அஜித்துக்கும் பக்க பலமாக இருந்துவருகிறார். சமீபத்திய பேட்டியில்கூட, 'ஷாலினி எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்' என ஏகே உருகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Shalini Reveals Unknown Side of Ajith Kumar Says He Cooked Biryani for 100 People
Photo Credit:

ரேஸில் அஜித்துடன்: ஏகே இப்போது கார் ரேஸில் முழு கவனத்தை செலுத்திவருகிறார். உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று தனது ரேஸிங் டீமுடன் கலந்துகொண்டு பந்தயமும் அடித்துவருகிறார். அவர் ரேஸ் செய்யும் இடத்தில் ஷாலினி தனது மகள், மகனும் பெரும்பாலும் இருந்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அஜித்தும் அதைத்தான் விரும்புகிறார். அதேபோல் தான் ரேஸுக்கு செல்லும் முன் அங்கே ஷாலினி இருந்தால் அவரது நெற்றியில் முத்தமிட்டுவிட்டுத்தான் அந்த இடத்திலிருந்து நகர்வார்.

Also Read
வெற்றிமாறனின் மனைவி, மகள் ட்ரெண்டிங் பாடலுக்கு கலக்கல் டான்ஸ்.. ஆஹா சூப்பரா ஆடுறாங்களே.. செம வீடியோ
வெற்றிமாறனின் மனைவி, மகள் ட்ரெண்டிங் பாடலுக்கு கலக்கல் டான்ஸ்.. ஆஹா சூப்பரா ஆடுறாங்களே.. செம வீடியோ

விருது வழங்கும் விழாவில் ஷாலினி: ஷாலினியை பொறுத்தவரை சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்டாமல் இத்தனை வருடங்கள் இருந்தார். கடைசியாக அவர் அசல் பட பூஜையில்தான் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அஜித் பேட்டிகள் கொடுக்கிறார், ஷாலினி விழாவில் கலந்துகொள்கிறார். இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்கள் இதெல்லம் நிஜம்தானா இல்லை கனவா என தங்களை தாங்களே கிள்ளி பார்த்துக்கொள்கிறார்கள்.

அஜித் பற்றி ஷாலினி: அந்த விழாவில் அவரிடம் அஜித் செய்யும் பிரியாணி குறித்தும், அவர் காலில் ஒருமுறை ஷாலினி விழுந்தபோது, 'வீட்டில் போய் நான் விழணும்' என ஏகே சொன்னது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இந்த வீடியோவில் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் வீட்டிலும் ஜாலியாக இருப்பார். அவர் ஹியூமர் நிறைய இருக்கக்கூடிய ஆள். அவருக்கு சமையல் என்றாலே ரொம்ப பிடிக்கும். ஐந்து, ஆறு பேருக்கு மட்டுமின்றி நூறு பேருக்குக்கூட அவர் பிரியாணி செய்திருக்கிறார். யாராவது வீட்டுக்கு வந்தால் சாப்பிட என்ன செய்யட்டும் என்றுதான் முதலில் கேட்பார்" என்றார்.

மகன்கள் பார்க்கவில்லை: மேலும் தனது குழந்தைகள் குறித்தும் பேசிய அவர், "என் குழந்தைகள் இதுவரை என்னுடையய் எந்தப் படத்தையும் பார்த்தது இல்லை. ஒவ்வொரு முறை திட்டமிடும்போதும் அம்மா அப்புறமாக பார்க்கலாம் என்று சொல்லிவிடுவார்கள். சமீபத்தில் என்னுடைய மகள் வந்து 'அம்மா உங்களுடைய அலைபாயுதே படத்தை பற்றி என்னுடைய தோழி கூறினாள். கதை மிகவும் அருமையாக இருக்கும் என சொன்னாள். அந்தப் படத்தை பார்க்க வேண்டும்' என்றார். ஆனால் அது நடக்கவில்லை. எனது மகனிடம் அமர்க்களம் படத்தில்தான் உனது அம்மாவும், அப்பாவும் முதலில் சந்தித்துக்கொண்டோம். அதையாவது பார் என்று சொன்னேன். அதையும் அவர் பார்க்கவில்லை" என கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X