ஷாலினிக்கே கல்யாண வயசுல பொண்ணு இருக்கு.. இன்னும் சிங்கிளா மலேசியாவில் ஷாமிலி என்ன பண்றாரு பாருங்க!

சென்னை: நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி பல ஆண்டுகளாக திருமணமே செய்துக் கொள்ளாமல் இன்னமும் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். ஓவியத்தின் மீது எல்லையில்லா ஆர்வம் கொண்டுள்ள அவர் மலேசியாவில் தற்போது தனது ஓவியங்களை கண்காட்சிக்காக வைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஷாலினியின் சகோதரியான ஷாமிலி மற்றும் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி என இருவருமே இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்துக் கொண்ட ஷாலினிக்கு வயதுக்கு வந்த மகளான அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

Shalini sister Shamlee showcased her modern art exhibition in Malaysia

ஷாலினியை போலவே சிறு வயதில் பல படங்களில் ஷாமிலியும் நடித்து வந்தார். ஆனால், ஷாலினி போல ஹீரோயினாக எல்லாம் அவர் ஷைன் ஆகவில்லை.

குழந்தை நட்சத்திரம்: தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்து 1989ம் ஆண்டு வெளியான ராஜநடை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ஷாமிலி. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதையும் வென்றார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய படங்களிலும் சிறு வயதிலேயே நடித்து அசத்தியவர் தான் ஷாமிலி.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், அஜித் குமார், தபு, அப்பாஸ் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஷாமிலி. 2009ம் ஆண்டு சித்தார்த்துக்கு ஜோடியாக தெலுங்கில் 'ஓய்' எனும் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் நடித்தார். ஆனால், அவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் குவியாத நிலையில், சிங்கப்பூருக்கு படிக்கச் சென்றுவிட்டார். விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்த ஷாம்லி அதன் பின்னர் கடைசியாக அம்மமகரிலு படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் எந்தவொரு படத்திலும் அவர் தலை காட்டவே இல்லை.

மலேசியாவில் ஓவியக் கண்காட்சி: திருமண வாழ்வில் பெரிதாக நாட்டம் இல்லாத நிலையில், படிப்பு, கலை என மற்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். மலேசியாவில் தற்போது தான் வரைந்த ஓவியங்களை கண்காட்சிக்காக வைத்துள்ள புகைப்படங்களை ஷாமிலி வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார்.

மலேசியாவில் ஜாலி ட்ரிப்: மேலும், மலேசியாவின் ட்வின் டவர்ஸ் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்த்த புகைப்படங்களையும் ஷாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். 37 வயதாகும் ஷாமிலி குடும்ப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துக் கொண்டு தனது அக்கா ஷாலினி மற்றும் அக்கா மகள் அனோஷ்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

மாடர்ன் ஆர்ட்டில் ஆர்வம்: நடிகை ஷாமிலிக்கு மாடர்ன் ஆர்ட் வரைவது என்றால் கொள்ளை பிரியம். தனது பாதையே இதுதான் என முடிவு செய்த அவர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஓவியக் கண்காட்சியை நடத்தி வருகிறார். வித விதமான வித்தியாசமான ஓவியங்களை வரைந்து வைத்திருக்கும் ஷாமிலி கடந்த மே 16ம் தேதி முதல் வரும் மே 30ம் தேதி வரை மலேசியாவில் தனது கண்காட்சி இருக்கும் என பதிவிட்டு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X