twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளா சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலுமேனன் ஜாமீன் மனு தள்ளுபடி

    |

    Shalu Menon’s bail plea rejected, remanded in police custody
    திருவனந்தபுரம்; கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி அமைத்து தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்ட நடிகை ஷாலுமேனனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவில் சோலார் பேனல் கருவி அமைத்துத் தருவதாக மக்கள் ஏமாற்றப்பட்ட வழக்கில், தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதாநாயர், கேரள டி.வி. நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

    இந்த ஊழலில், கேரள அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் உதவியாளர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சரை பதவியை ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது சிறையில் உள்ள நடிகை ஷாலுமேனன் ஜாமீன் கேட்டு திருவனந்தபுரம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய அரசு வக்கீல், 'திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராசிக் அலி என்பவரிடம் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு பிஜு ராதாகிருஷ்ணன் மோசடி செய்ததாகவும், அந்த பணத்தில் ரூ.46 லட்சத்தை ஷாலுமேனன் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். வக்கீலின் வாதத்தைத் தொடர்ந்து நடிகை ஷாலு மேனன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

    English summary
    The Chief Judicial Magistrate Court on Monday rejected the bail plea filed by actor Shalu Menon and remanded in police custody for three days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X