புடவைக்கு மாறியதும் குறைந்த மவுசு.. ஷாலு ஷம்முவை கண்டுக்க ஆள் இல்ல.. அந்த சர்ச்சை தான் காரணமா?
சென்னை: சோஷியல் மீடியாவில் விதவிதமான ரீல்ஸ் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இதன் மூலம் ஷாலுவிற்கு பெரிய அளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வரவில்லை என்றாலும், ஒரு சிலபடங்களில் நடித்தார். ஆனால், தற்போது ஷாலு ஷம்மு இருக்கும் இடம் தெரியவில்லை.
இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் சூரியின் காதலியாக நகைச்சுவை காட்சியில் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் ஷாலு ஷம்முவின் முகம் அனைவருக்கும் பரிச்சயமானது. இந்த படத்தை தொடர்ந்து, நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகை ஷாலு ஷம்மு: அதன்பின் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒரு சிறு வேடங்களில் நடித்திருந்தார். இவர் முதல் படத்தில் ஒல்லியாக இருந்த ஷாலு ஷம்மு அதன் பின் உடல் எடை கூடி, இணையத்தில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

கண்டுக்க ஆள் இல்ல: பட வாய்ப்பு இல்லை என்றாலும், சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் வீடியோ போடுவது, போட்டோஷூட் நடத்துவது என படு பிஸியாக இருக்கிறார். ஷாலு ஷம்மு முன்பெல்லாம் ஷாலுவின் போட்டோ வெளியானால், இணைத்து சோஷியல் மீடியாவில் அம்மணியின் போட்டோ தான் வலம் வரும். ஆனால், இப்போது ஷாலுவை கண்டுகொள்ளவே யாரும் இல்லை.
அந்த சர்ச்சை: அதற்கு காரணம் ஷாலு ஷம்மு, கடந்த 2023 ஆம் ஆண்டு,சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இரவு பார்ட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டார். அப்போது, நைட் பார்ட்டி முடிய நேரமானதால், சூளைமேட்டில் உள்ள அவரது தோழி வீட்டில் தங்கிய போது, தனது விலை உயர்ந்த செல்போன் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் அவரின் செல்போன் பார்சல் மூலம் திரும்ப கிடைத்தது. அந்த செல்போனில் சர்ச்சைக்குரிய பல வீடியோ இருப்பதாக சொல்லப்பட்டது. அந்த சர்ச்சைக்கு பிறகு ஷாலு ஷம்முவை பெரும்பாலும் பார்க்கவே முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல், முன்பு எல்லாம் கவர்ச்சியில் அதகளப்படுத்தும் ஷாலு ஷம்மு இப்போது இழுத்து போத்திக் கொண்டு, புடவை, சுடிதர் போன்ற கவர்ச்சி குறைவான உடைகளை பயன்படுத்தி போட்டோஸ் போடுவதன் காரணம் என கூறப்படுகிறது. தற்போது ஷாலு ஷம்மு புடவையில் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் பல ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











