கிளாமர்தான்... இருந்தாலும் க்யூட்.. டிவிட்டரை திணறடிக்கும் நடிகை!
Recommended Video
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டிருக்கும் புதிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை ஷாலு ஷம்மு முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாகவும், ஹீரோயின்களுக்கு தோழியாகவும், நகைச்சுவை நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக இவர் பப்பில் போடும் ஆட்டத்தை காண ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. அந்தளவுக்கு கவர்ச்சிக்காட்டுவார் ஷாலு ஷம்மு. படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடிக்கும் ஷாலு, ரியல் லைஃபில், அரைகுறை ஆடை, பப் என சுற்றி நேரத்தை கழித்து வருகிறார்.

பாவாடை தாவணி
இவரது கவர்ச்சி போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் ஒரு பக்கம் ரசித்தாலும் பலர் நெகட்டிவ் கமென்ட்டுகளையே அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அண்மையில் அவர் பாவாடை தாவணியில் ஷேர் செய்திருந்தார்.
என்ன அழகு
நடிகை ரம்யா பாண்டியன் ஸ்டைலில் இடுப்பு மடிப்பை காட்டி கிறங்கடித்திருந்தார் ஷாலு ஷம்மு. அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் என்ன அழகு என அவரை வர்ணித்திருந்தனர்.
தொப்புள் தெரிய..
இந்நிலையில் கறுப்பு மற்றும் கோல்டன் நிற ஜமிக்கி வேலைபாடு செய்யப்பட்ட உடையில் அசத்தலாய் போஸ் கொடுத்திருக்கிறார். தொப்புள் தெரிய போஸ் கொடுத்திருந்தாலும் இந்த போட்டோக்களில் ஷாலு ஷம்மு க்யூட்டாக தான் இருக்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வைரல்
இதனிடையே ஷாலு ஷம்மு பட வாய்ப்புக்காகதான் இதுபோன்ற போன்ற போட்டோக்களை பதிவிடுவதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். ஷாலு ஷம்முவின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











