இவங்கதான் ரியல் சிங்கப்பெண்.. சிங்கத்துக்கே என்னம்மா சாப்பாடு ஊட்டுறாங்க பாருங்க.. சபாஷ் ஷாமா!

மும்பை: பாலிவுட் நடிகை ஷாமா சிக்கந்தர், விலங்குகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களும், அவற்றுக்கு உணவூட்டி மகிழும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏகப்பட்ட கவர்ச்சி ஏவுகணைகளை இன்ஸ்டாவில் களமிறக்கி ரசிகர்கள் மனங்களை கவர்ந்துள்ள ஷாமா சிக்கந்தர், தற்போது சிங்கக்குட்டி பாலூட்டும் புகைப்படமும், வெள்ளை சிங்கத்துக்கு மாமிசம் கொடுக்கும் புகைப்படமும் கரடி உடன் விளையாடும் வீடியோவும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

இந்த அளவுக்கு பாலிவுட் நாயகி செம தில்லாக உள்ளாரே என ரசிகர்களும் பிரபலங்களும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்துள்ளனர்.

ஆமீர்கான் படத்தில்

ஆமீர்கான் படத்தில்

செக்ஸ்ஹோலிக், மான், பைபாஸ் ரோடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஷாமா சிக்கந்தர். ஆமிர்கான் நடிப்பில் வெளியான மான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் ஷாமா. கடந்த ஆண்டு வெளியான பைபாஸ் ரோடு படத்திலும் இவருக்கு சூப்பரான ரோல் கொடுக்கப்பட்டு இருந்தது.

சின்னத்திரை நட்சத்திரம்

சின்னத்திரை நட்சத்திரம்

ஹே மெரி லைஃப் ஹை, பாட்டிவாலா ஹவுஸ் நம்பர் 43, சி.ஐ.டி, காஜல், மேன் மெயின் ஹை விஸ்வாஸ், செவன், பால் வீர் உள்ளிட்ட ஏகப்பட்ட இந்தி சீரியல்களிலும் ஷாமா சிக்கந்தர் நடித்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்ட ஷாமா இன்ஸ்டாகிராமில் தற்போது கலக்கி வருகிறார்.

சிங்கக்குட்டிக்கு புட்டிப்பால்

சிங்கக்குட்டிக்கு புட்டிப்பால்

துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஷாமா சிக்கந்தர், அங்கே உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், சிங்கக்குட்டி ஒன்றுக்கு புட்டியில் பால் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

குழந்தை மாதிரி

அப்படியே டெடி பியர் பொம்மைக்குட்டி மாதிரி இருக்கும் அந்த வெள்ளை நிற சிங்கக்குட்டியை கையில் குழந்தை மாதிரி தூக்கி வைத்துக் கொஞ்சும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

கரடிக்கும் ஊட்டிவிட்டு

பெரிய கரடி ஒன்றுக்கு தனது கைகளாலே உணவுகளை எடுத்துக் கொடுத்து ஊட்டி விடுவதை எல்லாம் பார்க்கவே ரொம்ப க்யூட்டாவும் த்ரில்லாவும் இருக்கு. செம தில்லும்மா உனக்கு என பாலிவுட் பிரபலங்களும் ஷாமா சிக்கந்தரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ரியல் சிங்கப்பெண்ணே

ரியல் சிங்கப்பெண்ணே

மேலும், வெள்ளை நிற சிங்கம் ஒன்றுக்கு மாமிசம் எடுத்துக் கொடுக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு மிரட்டுகிறார் இந்த ரியல் சிங்கப்பெண். துபாயில் உள்ள மி பார்க்கில் வேற லெவல் த்ரில்லிங் அனுபவத்தை அனுபவித்ததை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X