உங்களுக்கு டிரெஸ்னாலே பிடிக்காதா..? ஓவர் கிளாமரில் பிரபல நடிகை.. ஆவேசமாகக் கேட்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை அணிந்துள்ள அரைகுறை டிரெஸ்சை கண்டு ரசிகர்கள் ஆவேசமாக கேள்வி கேட்டுள்ளனர்.
இந்தியில், மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார் ஷாமா சிக்கந்தர்.
கிளாமர் இல்லாமல் இவர் நடிக்கும் படங்கள் இல்லை. ஓவர் கிளாமரில் மிரட்டும் நடிகைகளில் ஒருவர் அவர்.

ஹாலிவுட் நடிகர்
டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். பல இந்தி தொடர்களில் நடித்துள்ள இவர் ஹாலிவுட் நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டவர். அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் அலெக்ஸ் ஓ நீலுடன் கஇணைந்து பேசப்பட்ட, நடிகை ஷாமா சிக்கந்தர், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரைப் பிரிந்தார்.

துபாயில் நிச்சயம்
பிறகு அமெரிக்க தொழிலதிபர் ஜேம்ஸ் மில்லிரான் என்பவரைக் காதலித்தார். இருவருக்கும் கடந்த துபாயில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என அடித்துச் சொல்கிறது விக்கிபீடியா. ஆனால், அதுபற்றி ஷாமா எதுவும் சொல்வதில்லை. அதுபற்றி அதிக தகவல்கள் வெளிவரவில்லை.

ரசிகர்கள் வெயிட்டிங்
சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருக்கும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர். இன்ஸ்டாவில், ஷாமா சிக்கந்தருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு போட்டோவும் வீடியோவும் லைக்ஸ்களை அள்ளுகிறது. கிளாமராக அவர் பதிவிடும் போட்டோவை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் வெயிட்டிங்.

தடுக்க முடியாது
அவர் இப்போதும் செம கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு கேப்ஷனாக, வெற்றிக்கு காரணம் தன்னம்பிக்கை. உங்களால் முடியும் என்று நம்புங்கள். உங்கள் கனவுக்கு தகுதியானவர்கள் என்று நம்பினால், உங்களை
யாராலும் தடுக்க முடியாது. நாம் அனைவரும் எல்லாவற்றுக்கும் தகுதியானவர்கள் தான் என்று கூறியுள்ளார்.

ஸ்டன்னிங் அழகு
சிலர் நெட்டிசன்ஸ், அவர் அழகை அப்படி வர்ணித்துள்ளனர். உங்கள் கண்கள் நிஜமாகவே வேறு மாதிரி இருக்கிறது, இது ஸ்டன்னிங் அழகு என்று சிலர் கூறியுள்ளார். உங்களுக்கு டிரெஸ்னாலே பிடிக்காதா? இப்படி அரைகுறையாக போடறீங்களே என சில நெட்டிசன்ஸ் விளாசியுள்ளனர். இந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











