»   »  அடடா.. இந்த ஷாமிலியை "அஞ்சலி" பாப்பா விட மாட்டேங்குதே.. துரத்துதே!

அடடா.. இந்த ஷாமிலியை "அஞ்சலி" பாப்பா விட மாட்டேங்குதே.. துரத்துதே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது வாங்கிய நடிகை ஷாமிலி, தற்போது தமிழில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இதில் விக்ரம் பிரபுவுடன் நடிக்கும் படத்தில் ஷாமிலியின் கதாபாத்திரப் பெயர் அஞ்சலியாம்.

மணிரத்னம் இயக்கத்தில் அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாமிலி. அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், பின்னர் படிப்பில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.

பின்னர் தெலுங்குப் படம் மூலம் குழந்தை நட்சத்திரத்திலிருந்து ஹீரோயின் என்ற நிலைக்கு உயர்ந்தார் ஷாமிலி.

அஞ்சலி... அஞ்சலி... அஞ்சலி

அஞ்சலி... அஞ்சலி... அஞ்சலி

தற்போது தமிழில் தனுஷூடன் கொடி மற்றும் விக்ரம் பிரபுவுடன் வீரசிவாஜி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஷாமிலி. இதில், வீரசிவாஜி படத்தில் ஷாமிலியின் கதாபாத்திரப் பெயர் அஞ்சலி எனத் தெரிய வந்துள்ளது.

அறிமுகப் பெயர்...

அறிமுகப் பெயர்...

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அதே பெயரிலேயே நாயகியாக அறிமுகமாகும் படத்திலும் ஷாமிலி நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணேஷ் விநாயக்...

கணேஷ் விநாயக்...

இப்படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை கணேஷ் விநாயக் என்பவர் இயக்கி வருகிறார்.

விக்ரம் பிரபு...

விக்ரம் பிரபு...

இப்படத்தில் விக்ரம் பிரபு டாக்சி டிரைவராக நடிக்கிறார். பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பயணத்தில் நடக்கும் கதைதான் ‘வீரசிவாஜி' எனக் கூறப்படுகிறது.

விஜய் ரசிகை...

விஜய் ரசிகை...

இப்படத்தில் ஷாமிலி விஜய் ரசிகையாக நடிக்கிறார் என்பது பட ஸ்டில்கள் மூலம் ஏற்கனவே தெரிய வந்துள்ளது. நிஜத்தில் ஷாமிலி அஜித்தின் மச்சினிச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ganesh Vinayak’s film Veera Sivaji will mark the return of actor ‘Baby’ Shamili to the Tamil film industry. In this film Shamili's character name is Anjali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil